Cyclone Michaung News In Tamil: வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று (சனிக்கிழமை) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தகவல்படி இன்றுகாலை புயலாக மாறியது. இந்த புயலுக்கு மிக்ஜாம் என்று பெயரிடப்பட்டுள்ளது. டிசம்பர் 3 முதல், மிக்ஜாம் புயல் வடமேற்கு நோக்கி நகரும் என ஐஎம்டி தெரிவித்துள்ளது. இந்த புயல் டிசம்பர் 5ம் தேதி காலை ஆந்திராவின் நெல்லூர் மற்றும் மச்சிலிப்பட்டினம் கரையை கடக்கும். அப்போது புயலின் வேகம் மணிக்கு 80-90 கி.மீ இருக்கும் எனவும், அத்நேரத்தில் மணிக்கு 100 கிமீ வேகத்தை கூட புயல் எட்டும் எனவும் கணிக்கப்பட்டு உள்ளது. ஆந்திர பிரதேசம் மற்றும் அதை ஒட்டிய வட தமிழகம், புதுச்சேரி கரையோரங்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, ஆரஞ்ச் அலெர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம்: மிக்ஜாம் புயல் 5ம் தேதி கரையை கடக்கும்
இன்று வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மிக்ஜாம் புயலாக வலுப்பெற்றது. சென்னையில் இருந்து 310 கி.மீ. தென்கிழக்கு திசையில் புயல் நிலைகொண்டுள்ளது. வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெற்று வட தமிழகத்தை நோக்கி புயல் நகரும். வரும் டிசம்பர் 5 ஆம் தேதி முற்பகலில் நெல்லூர் - மசூலிப்பட்டினம் இடையே புயலாக கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது, அதிகபட்சமாக மணிக்கு 80-90 கிமீ வேகத்தில் காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்யும்
மிக்ஜாம் புயலின் தாக்கத்தால், நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி கடற்கரையில், கடல் 100 மீட்டர் தூரம் பின்வாங்கியுள்ளது. அதே நேரத்தில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
Intense spell of rainfall to continue in Kancheepuram, Tiruvallur and Chengalpattu Districts #ChennaiRains @TiruvallurCollr @KanchiCollector pic.twitter.com/oiXLRlVwCV
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) December 3, 2023
தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
நாளை கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ள நிலையில், புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவர்களின் நலன் கருதி நாளை (டிசம்பர் 4) சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
வங்கக்கடலில் நிலவியுள்ள புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. நாளை (டிசம்பர் 4) புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் பிராந்தியத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
மேலும் படிக்க - மிரட்டும் மிக்ஜாம்... எப்போது கரையை கடக்கும்.... எங்கு கனமழைக்கு வாய்ப்பு?
நான்கு மாநிலங்களில் மிக்ஜாம் புயலின் தாக்கம்
மிக்ஜாம் புயல் காரணமாக தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், ஒடிசா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) December 3, 2023
மிக்ஜாம் புயல்: தமிழகம்
தமிழகத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மிக்ஜாம் புயல்: ஆந்திரப் பிரதேசம்
டிசம்பர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ராயலசீமா மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யும்.
மிக்ஜாம் புயல்: ஒடிசா
ஒடிசாவின் கடலோர பகுதிகளில் டிசம்பர் 4-5 தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. புயல் காரணமாக ஒடிசாவின் பாலசோர், பத்ரக், கேந்திரபாரா, ஜகத்சிங்பூர், பூரி, குர்தா மற்றும் கஞ்சம் ஆகிய ஏழு கடலோர மாவட்டங்கள் உஷார் படுத்தப்பட்டுள்ளன.
மிக்ஜாம் புயல்: புதுச்சேரி
புயல் காரணமாக புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பகுதிகளில் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் டிசம்பர் 4ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ளது.
புயலுக்கு மிக்ஜாம் என்று பெயர் வரக்காரணம் என்ன?
இந்த புயலுக்கு மியான்மர் "மிக்ஜாம் புயல்" என்று பெயர் வைத்துள்ளது. இது வலிமை மற்றும் நெகிழ்வுத்தன்மையைக் குறிக்கிறது. 2023 ஆம் ஆண்டில் வங்காள விரிகுடாவில் உருவாகும் நான்காவது புயல் மற்றும் இந்தியப் பெருங்கடலில் ஆறாவது புயல் மிக்ஜாம் புயல் ஆகும்.
இன்று தமிழகத்தில் மழை பெய்யக்கூடும் மாவட்டங்கள் விவரம்
இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை தமிழகத்தில் மழை பெய்யக்கூடும் மாவட்டங்கள்
நாளை வடதமிழகத்தில் அநேக இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது. திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, இராணிப்பேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க - புயலை எதிர்கொள்ள தயார்.. மக்களே கவனம் - அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ