நீலகிரி மாவட்டம் உதகையில் திமுகவின் உறுப்பினர் சேர்க்கை ஏடிசி பஸ் நிலையம் அருகில் நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் திமுகவின் கழகப் பொதுச் செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், சுற்றுலாத்துறை அமைச்சர் கா ராமச்சந்திரன் ஆகிய மூன்று அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.
மேலும் படிக்க | மதுரை மாநகராட்சி மேயருக்கு எதிராக திமுக கவுன்சிலர்கள் ஆர்பாட்டம்!
நிகழ்ச்சியில் மாவட்ட கழக செயலாளர் வாழ்த்துரை வழங்கி அனைவரையும் வரவேற்று பேசி கொண்டிருந்த போது திடீரென கரண்ட் கட்டானது. சிறுது நேரமாகியும் கரண்ட் வரவில்லை. அப்போது கட்சி நிர்வாகிகள் இடையே நீர்வளத்துறை அமைச்சர் மின்வாரிய அலுவலகத்திற்கு போனில் தொடர்பு கொண்டு என்ன காரணம் என கேட்கச் சொன்னார்.
பின்னர் கட்சிகாரரிடம் இருந்து செல்போனை வாங்கிய நீர்வள துறை அமைச்சர் துறை முருகன் உதகை நகர மின்வாரிய கூடுதல் பொறியாளரை தொடர்புக்கொண்டு மூன்று அமைச்சர்கள் பங்கேற்று இருக்கும் நிகழ்ச்சியில் திடீரென எப்படி கரண்ட் கட் ஆகும் என சராமாரியாக கேள்வி கேட்டு விளாசினார். பின்பு இது குறித்து நாளை காலை நேரில் வந்து விளக்கம் அளிக்குமாறு தெரிவித்தார். பின்பு சிறிது நேரத்தில் கரண்ட் வந்த பிறகு நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்றது.
மேலும் படிக்க | சென்னை மெரினாவில் பாணி பூரி சாப்பிட பெண் திடீர் மரணம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ