போக்குவரத்து துறை வேலை மோசடி தொடர்பாக சென்னையில் குற்ற பிரிவு போலீஸார் சோதனை..!!!

வேலை மோசடி வழக்கு தொடர்பாக சென்னையில் உள்ள பெருநகர போக்குவரத்து கழக (MTC) நிர்வாக இயக்குநர் வீட்டில்  போலீஸார் சோதனை நடத்தினர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 12, 2020, 02:39 PM IST
  • வேலை மோசடி வழக்கு தொடர்பாக சென்னையில் உள்ள பெருநகர போக்குவரத்து கழக (MTC) நிர்வாக இயக்குநர் வீட்டில் போலீஸார் சோதனை நடத்தினர்.
  • செந்தில் பாலாஜி முன்னாதாக அதிமுகவில் இருந்தார். ஆட்சியிலும் அமைச்சராக இருந்தார்,
போக்குவரத்து துறை வேலை மோசடி தொடர்பாக சென்னையில் குற்ற பிரிவு போலீஸார் சோதனை..!!! title=

முன்னாள் போக்குவரத்து அமைச்சர் (Transport Minister) செந்தில் பாலாஜி (Senthil Balaji), வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில்,  சென்னை நகர குற்றப்பிரிவு , அண்ணா நகர் மேற்கில் உள்ள பெருநகர போக்குவரத்து கழக்கத்தின் நிர்வாக இயக்குனர் கே கணேசனின் வீட்டில், சோதனை நடத்தினர்.

இது தொடர்பாக மதுரை மற்றும் கரூரில் உள்ள சிலரின் வளாகங்களிலும் தேடல்கள் மேற்கொள்ளப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன.வேலை மோசடி வழக்கு தொடர்பான மறு விசாரணையில் ஜனவரி மாதம் 17 இடங்களில் சி.சி.பிசென்னை குற்ற பிரிவு போலீஸார் சோதனைகளை மேற்கொண்டனர். ஒரு வாரம் கழித்து மண்டவேலியில் உள்ள செந்தில் பாலாஜியின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.

செந்தில் பாலாஜி முன்னாதாக அதிமுகவில் இருந்தார். ஆட்சியிலும் அமைச்சராக இருந்தார், ஆனால் திமுக கட்சியில் பின்னர் சேர்ந்து விட்டார். தற்போது அவர் அரவகுரிச்சி தொகுதி எம்.எல்.ஏவாக உள்ளார்.  2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் வேலை வாங்கித் தருவதாக கூறி, பலரிடம் பெறும் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

2015 ஆம் ஆண்டு எஸ் தேவசகாயம்  அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை குற்றப் பிரிவு,  ஐபிசி பிரிவுகள் 406 (நம்பிக்கை மோசடி), 420 (மோசடி) மற்றும் 506 (ஐ) ( மிரட்டல்) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்தது. போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கிக் கொடுப்பதாக உறுதி கூறி  81 பேரிடமிருந்து பணம் வாங்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை மறூவிசாரணை செய்ய உத்தரவிட்டதை அடுத்து, சென்னை குற்ற பிரிவு போலீஸார் கடந்த நவம்பரில் மறு விசாரணையைத் தொடங்கினர்.

Trending News