சர்ச்சை கருத்து : ஆர்.கே.செல்வமணிக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட்!

அவதூறு வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத பிரபல சினிமா இயக்குனர் ஆர்.கே.செல்வமணிக்கு  எதிராக வாரண்ட் பிறப்பித்து சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 5, 2022, 01:35 PM IST
  • சினிமா பைனான்சியர் போத்ரா குறித்து சர்ச்சை கருத்து
  • இயக்குநர் ஆர்.கே.செல்வமனிக்கு எதிராக பிடிவாரண்ட்
  • சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் பிறப்பிப்பு
சர்ச்சை கருத்து : ஆர்.கே.செல்வமணிக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட்! title=

தமிழ்நாடு சினிமா இயக்குநர்கள் சங்க தலைவரான ஆர்.கே.செல்வமணி, அரசியல் கதையம்ச படங்களை இயக்கி புகழ்பெற்றவர். 'புலன் விசாரணை', 'கேப்டன் பிரபாகரன்' போன்ற படங்கள் இவரது இயக்கத்தில் வெளியான மெகா ஹிட் திரைப்படங்களாகும். இவரது மனைவியும் நடிகையுமான ரோஜா ஆந்திர அரசியலில் அதிரடி பேச்சாளராகவும் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் உள்ளார். 

இதனிடையே, கடந்த 2016-ம் ஆண்டு இயக்குனர் ஆர்.கே.செல்வமணி மற்றும் காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ அருள் அன்பரசு ஆகியோர் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தனர். அப்போது, பைனான்ஸ்சியர் முகுந்த்சந்த் போத்ரா குறித்து சில கருத்துக்களை இருவரும் தெரிவித்திருந்தனர்.

மேலும் படிக்க | திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தலில் ஆர்.கே.செல்வமணி வெற்றி!

Bothra

இந்த கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியதால் ஆர்.கே.செல்வமணி மற்றும் அருள் அன்பரசு ஆகிய இருவர் மீதும் சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கை போத்ரா தொடர்ந்தார்.

வழக்கு நடைபெற்று கொண்டிருக்கும்போதே போத்ரா காலமான நிலையில் அவரது மகன் ககன் போத்ரா வழக்கை தொடர்ந்து நடத்தி வருகிறார். இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது 
ஆர்.கே.செல்வமணி மற்றும் அருள் அன்பரசு ஆகியோர் ஆஜராகவில்லை. 

மேலும் அவர்கள் இருவரது தரப்பு வழக்கறிஞர்களும் ஆஜராகவில்லை. இதனையடுத்து ஆர்.கே.செல்வமணி மற்றும் அருள் அன்பரசு இருவருக்கு எதிராகவும் ஜாமீனில் வெளிவரக்கூடிய வாரண்டை நீதிபதி பிறப்பித்தார். இதைத்தொடர்ந்து வழக்கு விசாரணை வரும் 23-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

மேலும்  படிக்க | தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News