16:44 | 31-07-2018
திமுக தலைவர் கருணாநிதியை பார்த்தேன்; அவர் நன்றாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது அவரின் உடல்நிலை சீராக உள்ளது. கலைஞர் கருணாநிதி மிகவும் மன திடம் படைத்தவர். நீண்டகாலமாக கலைஞருடன் எங்களுக்கு நல்ல தொடர்ப்பு உள்ளது. மேலும், கருணாநிதி உடல் நலம் பெற சோனியா காந்தியும் வாழ்த்து தெரிவித்தார்.
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து மு.க.ஸ்டாலினிடம் ராகுல் காந்தி, முகுல் வாஸ்னிக், திருநாவுக்கரசர், ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ஆகியோர் நலம் விசாரிப்பு!!
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க சென்னை வந்தார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி
வயது முதிர்வு மற்றும் உடல் நிலை சோர்வு காரணமாக திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் கடந்த சில மாதங்களாக மருத்துவ கண்கானிப்பில் இருந்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஜூலை 27-ஆம் நாள் இரவு அவருக்கு ரத்த அழுத்தக் குறைவு ஏற்பட்டதால் நள்ளிரவில் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார்.
ரத்த அழுத்தம் காரணமாக காவிரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த கருணாநிதியின் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரபரப்பட்டு வந்தது. இந்நிலையில், கருணாநிதியின் உடல்நிலை குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் காவிரி மருத்துவனையை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
இநிலையில், திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை குறித்து நலம் விசாரிக்க காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று சென்னை வருகிறார் என தகவல் வெளியானது. இதையடுத்து, தற்போது திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க சென்னை வந்தார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்னை வந்தடைந்தார்.
தற்போது அவர் சென்னை விமான நிலையத்தில் இருந்து, கலைஞரின் உடல்நிலை குறித்து விசாரிக்க காவிரி மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.