கோயம்புத்தூர் மக்களே கொண்டாட்டத்திற்கு தயராகுங்கள்.. இதோ கோவை விழா 2024

கோவை மக்கள் சிறப்பாக கொண்டாடும் கோவை விழா 2024 வருகின்ற நவம்பர் 23 ஆம் தேதி முதல் டிசம்பர் 1 ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். 

Written by - JAFFER MOHAIDEEN | Last Updated : Jul 3, 2024, 02:37 PM IST
  • கோவை மக்கள் சிறப்பாக கொண்டாடும் கோவை விழா.
  • இந்த வருடம் என்னென்ன ஏற்பாடுகள்?
  • பல்வேறு அமைப்புகள் மற்றும் உள்ளூர் மக்களால் கொண்டாடப்படுகிறது.
கோயம்புத்தூர் மக்களே கொண்டாட்டத்திற்கு தயராகுங்கள்.. இதோ கோவை விழா 2024 title=

கோவை விழா வருகிற நவம்பர் 23 ஆம் தேதி முதல் டிசம்பர் 1 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்கான லோகாவை கலெக்டர், காவல் ஆணையர், மாநகராட்சி ஆணையர் அறிமுகம் செய்து வைத்தனர். 

கோயம்புத்தூர் மக்களின் புகழ்பெற்ற கொண்டாட்டமான “கோவை விழா”, பல்வேறு அமைப்புகள் மற்றும் உள்ளூர் மக்களால் கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழா நகரத்தின் சாரத்தை உள்ளடக்கி அதன் கலாச்சாரம், வளமான பாரம்பரியம் மற்றும் சமூக உயிர்ச்சக்தியை வெளிப்படுத்துகிறது.

கோயம்புத்தூர் விழாவின், 17வது விழா வருகிற நவம்பர் 23 ஆம் தேதி முதல் டிசம்பர் 1 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனை 'கோயம்புத்தூர் தினம்' என்கிற கொண்டாட்டத்துடன் சேர்த்து நடத்தப்பட உள்ளது.

மேலும் படிக்க | திருவொற்றியூர் போலீசாருக்கு மிரட்டல் விடுத்த வீடியோ வைரல்! கொலை மிரட்டல் விடுத்தவர் கைது!

இதற்கான லோகோ அறிமுகம் விழா கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற உள்ளது. இதனை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் அறிமுகப்படுத்தினர்.

இந்த ஆண்டு நடைபெறவுள்ள கோயம்புத்தூர் விழாவில், நகரம் முழுவதும் ஒன்பது நாட்கள் பல்வேறு முக்கிய நிகழ்வுகள் இடம்பெற உள்ளது. குறிப்பாக டபுள் டெக்கர் பஸ், மியூசிக் கச்சேரி, ஆர்ட் ஸ்ட்ரீட், மராத்தான், உணவு விழாக்கள், விளையாட்டு நடவடிக்கைகள், 'கிராஸ்ரூட் மோட்டார்ஸ்போர்ட், குதிரை பந்தயம் நிகழ்வுகள், திறமை நிகழ்ச்சிகள் உணவு திருவிழா என 200க்கும் மேற்பட்ட நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளதாக கோவை விழாவின் தலைவர் அருண் செந்தில்நாதன் மற்றும் இணைத் தலைவர் சௌமியா காயத்ரி ஆகியோர் தெரிவித்தனர்.

ஒவ்வொரு நிகழ்வும் பல்வேறு ஆர்வங்களை ஈடுபடுத்துவதற்கும், கோயம்புத்தூர்களின் தனித்துவமான திறமைகளையும் உற்சாகத்தையும் வெளிப்படுத்துவதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | பன்னாட்டு சுற்றுலா முகவர்கள் பங்கேற்கும் தமிழ்நாடு சுற்றுலா கண்காட்சி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News