ஆளுநருக்கு கட்டுப்பட்டு நடக்க முதல்வர் ஒன்றும் பொம்மை இல்லை!

ஆளுநருக்கு கட்டுப்பட்டு நடக்க நான் ஒன்றும் பொம்மை அல்ல ஜனநாயகத்தின் காவலன் என பதவிப்பிரமாணம் எடுக்கும் போதே நிலைநாட்டிய தலைவர் தான் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் என தமிழ்நாடு பாடநூல் தலைவர் திண்டுக்கல் ஐ லியோனி பேசினார்.   

Written by - RK Spark | Last Updated : Jul 1, 2023, 08:35 AM IST
  • தமிழை கொலை செய்து வரும் பிரதமர் மோடி.
  • இந்திக்கு கொடுக்கும் வளர்ச்சி தொகையை தமிழுக்கும் கொடுக்க வேண்டும்.
  • திண்டுக்கல் ஐ லியோனி பேச்சு.
ஆளுநருக்கு கட்டுப்பட்டு நடக்க முதல்வர் ஒன்றும் பொம்மை இல்லை! title=

தூத்துக்குடியில் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழா பட்டிமன்றம் டுவிபுரத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு பாடநூல் தலைவர் திண்டுக்கல் ஐ லியோனி நடுவராக பங்கேற்ற பட்டிமன்றத்தில் பேச்சாளர்களாக நாக நந்தினி, இனியவன், மதுரை சங்கர், விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.  மக்கள் நலத்திட்டங்களா, திராவிடக் கொள்கைகளா என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த பட்டிமன்றத்தில் ஒவ்வொருவரும் திராவிடக் கொள்கைகள் மற்றும் கலைஞரால் கொண்டுவரப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள் பற்றி காரசாரமாக எடுத்துரைத்தனர்.  பின்னர் பேசிய தமிழ்நாடு பாடநூல் தலைவர் திண்டுக்கல் ஐ லியோனி தமிழக முதல்வரை பதவி பிரமாணம் செய்த ஆளுநர் எம் கே ஸ்டாலின் என அறிவித்த ஆளுநரின் பேச்சை அடுத்து பேசிய தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் என அன்றே தான் யார் என்பதை நிலைநாட்டியதோடு ஆளுநருக்கு கட்டுப்பட்டு இருக்க நான் ஒன்றும் பொம்மை அல்ல ஜனநாயகத்தின் காவலன் என பதவிப்பிரமாணம் இருக்கும் போதே எடுத்துரைத்த தலைவர் தான் தமிழக முதல்வர் எனக் கூறியவர்.

மேலும் படிக்க | சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரம்: அண்ணாமலை எச்சரிக்கை

ஒவ்வொரு மேடையிலும் ஹிந்தியில் எழுதி வைத்த தமிழ் கவிதைகளை படிக்கிறேன் என்ற பெயரில் தமிழை கொலை செய்து வரும் பிரதமர் மோடி நீங்கள் தமிழ் பாட்டை மேடையில் பாடும் போது சந்தோஷமாக இருந்தாலும் அதே தமிழ் மொழிக்கு, தமிழ் வளர்ச்சிக்காக ஹிந்தி பேசும் மாநிலங்களில் இந்திக்கு கொடுக்கும் வளர்ச்சி தொகையை தமிழுக்கும் கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்ட ஐ லியோனி நாங்கள் இந்தி கற்றுக்கொள்ள மாட்டோம் என கூறவில்லை ஆனால் திணிக்க வேண்டாம் என்பதுதான் எங்களது எண்ணம்.  

ஹிந்தி தெரிந்தால் வேலை கிடைக்கும் என தவறான அணுகுமுறையை கொண்டு வந்து ஹிந்தியை திணிப்பதை எதிர்த்த ஒரே இயக்கம் திராவிட முன்னேற்ற கழகம் தான் ஹிந்தியின் மேல் எந்த கோபமும் இல்லை தேவைப்பட்டால் படித்துக் கொள்வது, தான் மும்பையில் வாழ்வது என்றால் கண்டிப்பாக இந்தி தெரிந்தே ஆக வேண்டும் ஆனால் தமிழகத்தில் இருப்பவர்களிடம் இந்தியை படித்தே ஆக வேண்டும் என்பதை திணிப்பதை தான் நாங்கள் எதிர்க்கிறோம் என கூறினார்.

உள்துறை அமைச்சர் அமித்ஷா மோடி பிரதமராக இருக்க தகுதியற்றவர் என கூறி இருக்கிறார். அடுத்த பிரதமர் தமிழகத்திலிருந்து தான் என கூறியிருக்கிறார் அமித்ஷா, அடுத்து வரக்கூடிய பிரதமரை உருவாக்குகின்ற தலைவர் தளபதி மு க ஸ்டாலின் தான் வகுத்த வியூகம் தான் என காரசாரமாக பேசி பட்டிமன்றத்தை நிறைவு செய்தார்.

மேலும் படிக்க | 'தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி -க்கு ஒரு கேள்வி': இரவோடு இரவாக ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News