ஆசைக்கு இணங்காத அண்ணி.. அண்ணன் மகனையே கொன்ற கொடூர சித்தப்பா! அதிர்ச்சி பின்னணி!

Child Found Dead in Speaker Box: திருக்கோவிலூர் அருகே காணாமல் போன சிறுவன் அதே வீட்டில் ஸ்ப்பீக்கர் பாக்ஸில் இருந்து சடலமாக மீட்கப்பட்டான். சிறுவன் கொலை வழக்கை விசாரித்த போலீசாரை மிரள வைக்கும் அளவுக்கு பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது. என்ன நடந்தது என்பதை விரிவாக காணலாம்.     

Written by - Bhuvaneshwari P S | Last Updated : Sep 21, 2023, 04:46 PM IST
  • கள்ளக்குறிச்சியில் குழந்தையின் சடலம் ஸ்பீக்கர் பாக்ஸில் இருந்து மீட்கப்பட்டது.
  • கொலையா? விபத்தா என போலீஸார் விசாரித்தனர்.
  • இதில், குழந்தையின் சித்தப்பா பிடிப்பட்டுள்ளார்.
ஆசைக்கு இணங்காத அண்ணி.. அண்ணன் மகனையே கொன்ற கொடூர சித்தப்பா! அதிர்ச்சி பின்னணி! title=

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருப்பாலப்பந்தல் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் குருமூர்த்தி. கூலி தொழிலாளியான இவருக்கு இரண்டு வயதில் திருமூர்த்தி என்ற மகன் இருந்தார். கடந்த 17ஆம் தேதி வீட்டின் முன்பக்கத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை திடீரென காணாமல் போனது. இதனையடுத்து அன்று மாலை விளையாடிக் கொண்டிருந்த குழந்தை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.  இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். நான்கு நாட்களாக திருப்பாலப்பந்தல் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை குருமூர்த்தியின் வீட்டில் உள்ள ஸ்பீக்கர் பாக்ஸ் ஒன்றில் இருந்து துர்நாற்றம் வீசி உள்ளது. இதனை அடுத்து சந்தேகத்தின் பேரில் வீட்டில் இருந்த ஸ்பீக்கர் பாக்ஸை திறந்து பார்த்தபோது அதில் காணாமல் போன இரண்டு வயது சிறுவன் திருமூர்த்தி சடலமாக இருந்துள்ளார். 

இதனால் அதிர்ச்சி அடைந்த  சிறுவனின் உறவினர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.  தகவரின் பேரில் அங்கு வந்த போலீசார் குழந்தையின் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுவனை கொலை செய்தது யார் என்பதை கண்டுபிடிக்க விசாரணையை தொடங்கினர். அப்போது தான் சிறுவனின் சித்தப்பாவே குழந்தையை கொன்றது தெரியவந்தது. குருமூர்த்தி பெங்களூருவில் லோட் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது தம்பி ராஜேஷ் பெங்களூருவில் கொஞ்சம் நாட்களும், சொந்த ஊரில் கொஞ்சம் நாட்களும் இருந்து வந்துள்ளார். 

மேலும் படிக்க | கும்பகோணத்தில் 6 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி - மேலும் 27 பேருக்கு காய்ச்சல் அறிகுறிகள்

இப்படிப்பட்ட சூழலில் தனது அண்ணன் குருமூர்த்தியின் மனைவி ஜெகதீஸ்வரி மீது ராஜேஷ்க்கு ஆசை வந்துள்ளது. அவரிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றுள்ளார். ஆனால் அதற்கு ஜெகதீஸ்வரி எதிர்ப்பு தெரிவித்ததோடு, அவருடன் பேசுவதையும் நிறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராஜேஷ் கடந்த 17-ம் தேதி வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த திருமூர்த்தியை கழுத்தை நெறித்தும், சுவற்றில் அடித்தும் கொலை செய்துள்ளார். அதன்பிறகு வீட்டில் இருந்த ஸ்பீக்கர் பாக்ஸில் சிறுவனின் சடலத்தை வைத்துவிட்டு ஒன்றும் தெரியாதது போல வெளியே சென்றுள்ளார். 

அதன்பிறகு சிறுவனை காணவில்லை என தேடியுள்ளனர். சிறுவனின் சடலம் கிடைத்ததும் தகவல் அறிந்த ராஜேஷ், திருப்பாலப்பந்தல் கிராம நிர்வாக அலுவலரிடம் சரண் அடைந்துள்ளார். அவர் தான் போலீசிடம் மேலே குறிப்பிடப்பட்ட தகவல்களை வாக்குமூலமாக அளித்துள்ளார். ஆசைக்கு இணங்க மறுத்த அண்ணனின் மனைவியை பழிவாங்க சிறுவனை சித்தப்பாவே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | தகாத உறவை கண்டித்த கணவன் காதலனால் வெட்டிக்கொலை! காதலிக்காக மனைவியையும் கொன்றாரா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News