காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்திற்கு திமுக காஞ்சிபுர வடக்கு மாவட்ட செயலாளரும், தமிழக சிறு குறு மற்றும் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் தலைமை தாங்கினார். கூட்டத்தையொட்டி மறைமலை நகரில் பிரமாண்ட பொதுக்கூட்ட மேடை அமைக்கப்பட்டது.
பொதுக்கூட்டத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த 25,000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “திமுக அரசின் சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தை பேரறிஞர் அண்ணா, 'மாலை நேரத்தில் கல்லூரி' என அழைப்பார்.
நான் தற்போது செங்கல்பட்டு மாவட்டத்திற்கு வந்துள்ளேன். எனது மாற்றத்திற்கு வித்திட்ட மாவட்டமும் இதுதான். மிசாவில் கைது செய்யப்பட்டபோது மக்களின் இதயத்தில் அடைக்கப்பட்ட சிறைவாசியாக இருந்தேன். கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் தமிழகத்தின் வளர்ச்சிக்காக அதிமுக எதுவும் செய்யவில்லை.
திமுக பொறுப்பேற்ற பத்து மாதத்தில் தமிழகம் தலைநிமிர்ந்துவிட்டது. இதுதான் திமுகவின் சாதனை. அதனை நான் நெஞ்சை நிமிர்த்தி சொல்ல விரும்புகிறேன். 10 மாதங்களில் 64 ஆயிரம் கோடி ரூபாய்க்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.இதனால் இரண்டு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.
அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கக்கூடாது என நினைப்பவர்கள்தான் திமுக ஆட்சியை எதிர்க்கிறார்கள்.அதனைப் பற்றி நான் கவலைப்படவில்லை. எதிர்ப்பில் வளர்ந்ததுதான் திமுக நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும் சட்ட முன்வடிவை தமிழ்நாடு சட்டமன்றத்தில் அனைத்து கட்சிகளும் இணைந்து இரண்டு முறை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியுள்ளோம். அதனை குடியரசு தலைவருக்கு அனுப்பக்கூடிய வேலையைக்கூட ஆளுநர் மறுக்கிறார். இது தமிழ்நாட்டு மக்களுக்கு செய்யப்படும் அநீதி.
தமிழ்நாட்டிற்கு தரக்கூடிய பல ஆயிரம் கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு கொடுக்க வேண்டும். நான் டெல்லிக்கு சென்று பிரதமரிடமும், மத்திய நிதியமைச்சரிடமும் உரிமையோடு நிதி கேட்டேன்.அமித்ஷா விற்கு இந்தி பேசும் மாநிலங்கள் மட்டும் போதுமா? இந்தியா என்பது இந்தி பேசும் மாநிலங்கள் மட்டும்தானா? எங்கள் மொழிக்கும் பண்பாட்டிற்கும் தனித்துவம் இருக்கிறது” என்றார்.
மேலும் படிக்க | கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் இனி நடைபெறாது..!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR