Tamil Nadu Lok Sabha Election Result 2024: நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாகியிருக்கும் நிலையில், சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகளில் வெற்றி பெற வைத்த வாக்காளர்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நன்றி தெரிவித்தார். மேலும், மாநில கட்சி என்ற அங்கீகாரத்தை இந்த வெற்றி பெற்று கொடுக்கும் என தெரிவித்துள்ள அவர், இதற்காக தமிழக மக்களுக்கு மனதார மீண்டும் ஒரு நன்றியை தெரிவிப்பதாக கூறியுள்ளார். இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய திருமாவளவன், " விழுப்புரம், சிதம்பரம் இரண்டு தொகுதிகளிலேயும் மக்கள் எங்களுக்கு வாக்களித்துa தமிழகத்தில் ஒரு அங்கீகாரத்தை வழங்கி உள்ளார்கள். மாநில கட்சி என்ற ஒரு அந்தஸ்தை பெற ஒரு வாய்ப்பை உருவாக்கி உள்ளார்கள் அவர்களுக்கு நன்றி" என கூறியுள்ளார்.
மேலும் படிக்க | ‘இந்த’ 5 தமிழக தொகுதிகளில் திமுகவிற்கு வெற்றி முகம்! வெற்றி பெறப்போகிறவர்கள் யார்?
தொடர்ந்து பேசிய திருமாவளவன், " தமிழ்நாடு முழுவதும் ஏற்கனவே கணித்தபடி 40க்கு 40 வெற்றி உறுதியாகிவிட்டது. அகில இந்திய அளவில் இந்தியா கூட்டணி 225 முன்னிலையில் இருக்கின்றன. சென்ற முறை பாஜக தனி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தது. ஒரு மாயை, அது உண்மை அல்ல. மோடி அலை என்பதும் ஒரு மாயை அது உண்மை இல்லை என மக்கள் தெரிவித்துள்ளார்கள். அதனால் அதிகப் பெரும்பான்மையை பெற முடியாத நிலை பாஜகவுக்கு ஏற்பட்டிருக்கிறது.
இந்தியா கூட்டணி மக்களின் நன் மதிப்பை பெற்றிருக்கிறது, இன்னும் பல சுற்றுகள் என்னவேண்டியுள்ளது. அது எப்படி வேண்டுமானும் அமையலாம். இந்தத் சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் போட்டியிடக் கூடாது என்று பலரும் ஆருடம் சொன்னார்கள். நான் இந்த தொகுதியில் தான் நிற்பேன் எம்மண்ணின் மக்களின் முடிவு எதுவாக இருந்தாலும் நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று உறுதியாக நின்றேன். இன்றைக்கு 12 சுற்றுகளிலேயே 60 ஆயிரம் வாக்குகளை பெற்று முன்னிலையில் இருக்கின்றேன்.
விழுப்புரம், சிதம்பரம் இரண்டு தொகுதிகளிலேயும் மக்கள் எங்களுக்கு வாக்களித்து தமிழகத்தில் ஒரு அங்கீகாரத்தை வழங்கி உள்ளார்கள். மாநில கட்சி என்ற ஒரு அந்தஸ்தை பெற ஒரு வாய்ப்பை உருவாக்கி உள்ளார்கள் அவர்களுக்கு நன்றி. இந்தியா கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு தமிழக முதல்வர் தலைவர் ஸ்டாலின், மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ் அதற்கான ஏற்பாடுகளை முன் நின்று செய்வார்கள்" என தெரிவித்தார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ