தீபாவளியை முன்னிட்டு சென்னை பல்கலை., தேர்வு ஒத்திவைப்பு!

வரும் தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும் பொதுமக்கள் வசதியினை கருத்தில் கொண்டு, தீபாவளிக்கு முந்தைய நாளான நவம்பர் 5-ஆம் நாள் அரசு விடுமுறையாக அறவிக்கப்பட்டுள்ளது.

Last Updated : Oct 30, 2018, 05:44 PM IST
தீபாவளியை முன்னிட்டு சென்னை பல்கலை., தேர்வு ஒத்திவைப்பு! title=

வரும் தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும் பொதுமக்கள் வசதியினை கருத்தில் கொண்டு, தீபாவளிக்கு முந்தைய நாளான நவம்பர் 5-ஆம் நாள் அரசு விடுமுறையாக அறவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பினை அடுத்து நவம்பர் 5-ஆம் நாள் நடைபெறவிருந்த சென்னை பல்கலை தேர்வுகள் டிசம்பர் 7-ஆம் நாள் நடைபெரும் என சென்னை பல்கலை தேர்வு கட்டுப்பாட்டாளர் அறிவித்துள்ளார்.

நவம்பர் 5-ஆம் நாள் திங்கள் கிழமை ஆகும். இந்நாளுக்கு அடுத்த நாள் தீபாவளி விடுமுறை என்பதாலும், நவம்பர் 3, 4 ஆகிய தேதிகள் சனி, ஞாயிறு விடுமுறை என்பதாலும் பயணிகளுக்கு ஏதுவாக தொடர்ந்து 4 நாள் விடுமுறை அளிக்கும் வகையில் நவம்பர் 5-ஆம் நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக வரும் நவம்பர் 10-ஆம் நாள் பணி நாளாக அனுசரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிக்கைக்காக தங்களது சொந்த ஊருக்கு சென்று மகிழ்ச்சியுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாட ஏதுவாக பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலங்கள் என அனைத்திற்கும் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

பல்வேறு தரப்புகளில் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை பரிசீலித்து பின்னர் இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு செய்திகுறிப்பு தெரிவிக்கின்றது!

Trending News