Chennai News: இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் பாகிஸ்தானுக்கும், கிருஸ்துவ மக்கள் வேறு எங்கேயாவது சென்றுவிடும்படி புளியந்தோப்பு போக்குவரத்து புலனாய்வு ஆய்வாளர் பேசிய ஆடியோவுக்கு சென்னை காவல் ஆணையர் உடனடியான நடவடிக்கை எடுத்தது மட்டுமின்றி, மற்ற காவல்துறையினர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த விவகாரம் குறித்த முழு தகவல் இதோ...
சென்னை புளியந்தோப்பு போக்குவரத்து புலனாய்வு ஆய்வாளர் ராஜேந்திரன் என்பவர் ஒரு வாட்ஸ்அப் குழுவில் பல நாட்களாக இருந்து வந்துள்ளார். அந்த வகையில், புனித மேரி மாதா கோவில் குறித்த பாடல்களை அந்த வாட்ஸ்அப் குழுவில் கிஸ்டோபர் என்பவர் நேற்று (ஆக. 6) பகிர்ந்துள்ளார்
பின்னர் புளியந்தோப்பு மாவட்ட போக்குவரத்து புலனாய்வு ஆய்வாளர் ராஜேந்திரன் அக்குழுவில் தலையிட்டு, அந்த பாடல்கள் குறித்து ஆட்சேபனை தெரிவித்து கருத்து தெரிவித்திருக்கிறார். அதாவது, அவர் அந்த வாட்ஸ்அப் குழுவில் கூறியதாவது, "இந்துக்களான நாங்கள் 80 சதவீதமும், மீதம் உள்ள கிருஸ்துவர்கள், இஸ்லாமியர்கள் வெறும் 20 சதவீதம் மட்டுமே" என கேலி செய்யும் வகையில் மெசேஜ் செய்துள்ளார்.
மேலும் படிக்க | அமைச்சர் பேச்சு முக்கியமா? பிரியாணி முக்கியமா? ஓட்டம் பிடித்த திமுகவினர்!
மேலும் அவர், "பாபர் மசூதியை இடித்து இந்து கோயிலை கட்டியவர்கள் நாங்கள். எங்களுடைய மெஜாரிட்டி தான் அதிகம். இங்கு ராம ராஜ்ஜியம் நடக்கும், முடிந்தால் அதை தடுத்து பாருங்கள். மேலும் முஸ்லிம்கள் பாகிஸ்தானிலும் கிறிஸ்தவர்கள் வேறு எங்கேயாவதும் சென்று விட வேண்டியது தானே. இனி கிறிஸ்தவர்கள் பாடல் மற்றும் முஸ்லிம்கள் பாடல் என எதையும் இங்கு (வாட்ஸ்அப் குழு) பகிரக் கூடாது" என அந்த வாட்ஸ்அப் குழுவில் எச்சரிக்கை விடுக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.
இதை அக்குழுவில் இருந்த நபர்கள் சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்திப்ராய் ரத்தூரின் கவனத்திற்கு கொண்டு செல்லும் விதமாக அந்த ஆடியோவை உயர் அதிகாரிகளுக்கு பகிர்ந்தனர். இந்த நிலையில், அந்த ஆடியோ பதிவை ஆய்வு செய்த நிலையில், ராஜேந்திரன் மீது இன்று நடவடிக்கை பாய்ந்துள்ளது.
சென்னை பெருநகர காவல் துறை, புளியந்தோப்பு போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் P.ராஜேந்திரன் (1999 SI Batch) என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது நண்பர்கள் Whatsapp குழுவில் மதம் தொடர்பான கருத்துக்களை ஆடியோவாக பதிவிட்டதற்காக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர், உத்தரவின் பேரில், போக்குவரத்து இணை ஆணையாளர் (தெற்கு) N.M.மயில்வாகணன்,இன்று போக்குவரத்து புலனாய்வு காவல் ஆய்வாளர் P.ராஜேந்திரன் என்பவரை தற்காலிக பணி இடை நீக்கம் (Suspension) செய்து உத்தரவிட்டுள்ளார் என தமிழ்நாடு காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | கருணாநிதி குறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்ட உருக்கமான வீடியோ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ