Chennai IIT மாணவி பாத்திமா தற்கொலை; நீதி கேட்கும் நெட்டிசன்கள் #FathimaLatheef

மதரீதியான துன்புறத்தல் காரணமாக மாணவி தற்கொலை செய்துக்கொண் சம்பவத்தை குறித்து விசாரணையில் தமிழக காவல் துறை ஈடுபட்டுள்ளது

Written by - Shiva Murugesan | Last Updated : Nov 14, 2019, 09:45 AM IST
Chennai IIT மாணவி பாத்திமா தற்கொலை; நீதி கேட்கும் நெட்டிசன்கள் #FathimaLatheef title=

புதுடெல்லி: கேரளாவை (Kerala) சேர்ந்த பாத்திமா லத்தீப் (Fathima Latheef) என்ற மாணவி சென்னை ஐஐடி (Indian Institute of Technology Madras) படித்து வந்த நிலையில், அவர் கல்லூரி வளாகத்திலேயே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சி மற்றும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த மாணவி முதலாமாண்டு முதுகலை படிப்பில் படித்து வருகிறார். மதரீதியான துன்புறத்தல் காரணமாக தான் மாணவி கடந்த சனிக்கிழமை தற்கொலை செய்துக்கொண்டார் என கூறப்படுகிறது. அதுக்குறித்து விசாரணையில் தமிழக காவல் துறை ஈடுபட்டுள்ளது. சென்னை ஐஐடி கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என பலரிடம் காவல் துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. மாணவியின் தற்கொலைக்கு உண்மையான காரணம் என்னவென்று விரைவில் தெரிய வரும் என காவல்துறை அதிகாரி கூறியுள்ளார்.

மாணவியின் தந்தை, தன் மகளின் தற்கொலை குறித்து மிகவும் உருக்கமாக பேசியுள்ளார். அவர் கூறியது, தற்கொலைச் செய்து கொள்ளும் அளவுக்கு தன் மகள் கோழையாக இருந்ததில்லை பேராசிரியர் மூலம் மதரீதியான தொந்தரவு தன் மகளுக்கு தரப்பட்டது என்றும். அதனால் அவள் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார் என பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப் கூறியுள்ளார். அதேபோல அவரின் தாயார், அவர் தமிழ்நாடு பாதுகாப்பானது என நம்பித் தானே அனுப்பினோம். என் மகளுக்கு இப்படி ஆகி விட்டதே எனக் கண்ணீருடன் கூறினார். 

ஐஐடி நுழைவுத் தேர்வில் இந்தியாவிலேயே முதலாவது மாணவியாக தேர்வாகியவர் பாத்திமா லத்தீப். அவரின் தற்கொலைக்கு சரியான விசாரணை மற்றும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ஒருபக்கள் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. அதேவேலையில், தற்கொலை செய்துக்கொண்ட சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப்புக்கு நீதி வேண்டும் என்றும், அவரின் தற்கொலைக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. 

மேலும் #JusticeForFathimaLatheef மற்றும் #JusticeForFathima போன்ற ஹெஷ்டேக் மூலம் நீதி வேண்டும் என கருத்து பதிவிட்டு இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

Trending News