சென்னை: சென்னையில் 11ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி வீட்டில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை முகப்பேரில் உள்ள வேலம்மாள் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி தூக்கிட்டு கொண்டதாக கூறப்படுகிறது. தந்தை தனியாக வாழ்ந்து வரும் நிலையி, தாயுடன் சென்னை கீழ்பாக்கம் காவலர் குடியிருப்பில் வசித்து வந்த மாணவியின் மரணம் அந்தப் பகுதியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. தாய் வேலைக்கு சென்றபோது, தனியாக இருந்த பெண், தாய் வீட்டிற்கு வந்தபோது பிணமாக இருந்தார்.
மாணவியின் தாய் கலைவாணி. புளியந்தோப்பு போக்குவரத்து புலனாய்வு பிரிவில் தலைமை காவலராக பணி செய்து வருகிறார். இவர் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக கணவர் ராமதேவனை பிரிந்து அவருடைய 15 வயது மகள் அக்சராவுடன் கீழ்ப்பாகம் காவலர் குடியிருப்பில் வசித்து வந்துள்ளார்.
மேலும் படிக்க | 5G அலைகற்றை உதுகீட்டில் 3 இலட்சம் கோடி ரூபாய் வரையில் முறைகேடு: சீமான்
மாணவி அக்சரா சென்னை முகப்பேரில் உள்ள வேலம்மாள் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று (ஆகஸ்ட் 10ம் தேதி) தாய் கலைவாணி வழக்கம் போல் பணிக்கு சென்றுள்ளார். தாய் இல்லாமல் தனியாக இருந்தபோது, மகள் அக்சரா வீடில் தனியாக இருந்துள்ளார்.
மாணவி அக்ஷராவின் சடலம் பிரேத பரிசோதனை முடிந்த பிறகுதான் இந்த மரணம் தொடர்பான தெளிவான பார்வை, அதாவது மாணவி தற்கொலை செய்துக் கொண்டாரா இல்லையா என்பது தெரியவரும்.
மேலும் படிக்க | பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலை
இந்த நிலையில் கலைவாணியின் உடன்பிறந்த சகோதரரான குணசேகரன் அக்சரவை வீட்டிற்கு சென்று பார்க்கும் போது உள்ப்பக்கமாக பூட்டப்பட்டிருந்தாக தெரிகிறது.
அதை பார்த்த அதிர்ந்து போன அவர் உடனடியாக அவரது சகோதரிக்கு தகவல் தெரிவித்து உள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த கலைவாணி அவசர அவசரமாக வீட்டிற்க்கு விரைந்து வந்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து இருவரும் சேர்ந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்க்கும் போது வீட்டு ஹாலில் துப்பட்டாவால் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருந்த அக்சராவை பார்த்து துடிதுடித்துள்ளனர்.
மேலும் இது தொடர்பாக போலீஸாருக்கு தகவல் தெரிவித்து உடலை மீட்டு அப்போலோ பர்ஸ்ட் மெட் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பொழுது அக்சராவை பரிசோதித்த மருத்தவர்கள் அவர் பாதி வழியிலேயே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள கீழ்பாக்கம் போலீசார் 11 வகுப்பு படிக்கும் மாணவி எதற்காக இப்படி செய்து கொண்டார் என்று பல்வேறு கோணங்களில் தங்களது விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க | எதற்காக ரஜினி ஆளுநரை சந்தித்தார்? அண்ணாமலை விளக்கம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ