சென்னையில் திடீர் என வெளுத்து வாங்கிய மழை; நாளை வரை தொடரும்...!

சென்னையில் இன்று இரவும் நாளை காலையும் மழை பெய்வது உறுதியென தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்...! 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 16, 2018, 06:05 PM IST
சென்னையில் திடீர் என வெளுத்து வாங்கிய மழை; நாளை வரை தொடரும்...!  title=

சென்னையில் இன்று இரவும் நாளை காலையும் மழை பெய்வது உறுதியென தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்...! 

வெப்பசலனம் காரணமாக சென்னையில் கடந்த சில நாட்களாக லேசான தூரலுடன் ஆங்காங்கே மழை பெய்துவருகிறது. இந்நிலையில் இன்று இரவும் நாளை காலையும் சென்னையில் மழை பெய்வது உறுதியென வெதெர்மேன் தெரிவித்துள்ளார். மேலும் அண்ணா நகர் மேற்கு பகுதியில் மழை பொழிவதாகவும், மரங்கள் விழுந்துள்ளதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.

சென்னையில் எழும்பூர், புரசைவாக்கம், தி.நகர், கோடம்பாக்கம், கீழ்ப்பாக்கம், ஈக்காட்டுத்தாங்கல், கே.கே. நகர், வில்லிவாக்கம், திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்துள்ளது. இதே போன்று கோயம்பேடு, வளசரவாக்கம், வானகரம், ஐயப்பன்தாங்கல், காட்டுப்பாக்கம், கொளத்தூர், அமைந்தகரை, செங்குன்றம், பூவிருந்தவல்லி, அண்ணாநகர் ஆகிய பகுதிகளிலும் மழை பெய்துள்ளது.

சென்னை காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான இடியுடன் கூடிய மழை பெய்யுமென இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

Trending News