சென்னை, புறநகர் பகுதிகளில் அதிகாலை முதல் மழை!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை முதல் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.

Last Updated : Oct 7, 2018, 09:04 AM IST
சென்னை, புறநகர் பகுதிகளில் அதிகாலை முதல் மழை! title=

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை முதல் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.

ரெட் அலர்ட் வாபஸ் பெறப்பட்ட நிலையில் இன்று அதிகாலை முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், கடலூர் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதால் தமிழகம் மற்றும் கேரளாவுக்கு எச்சரிக்கை விடப்பட்டது. மேலும், சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்திருந்தது.

இந்நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலை முதல் மழை பெய்து குளிர்வித்து வருகிறது. கடலூர் மாவட்டத்தில் பல பகுதிகளில் பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் தாழ்வாக உள்ள சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.

Trending News