சென்னையில், நாளை முதல் மெட்ரோ இரயில் பணிகள் தொடங்க உள்ளன. இதன் காரணமாக இராயப்பேட்டை, மயிலாப்பூர் & மந்தைவெளி சாலைகளில் செய்யப்பட உள்ள போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அவை என்னென்ன சாலைகள் என்பதையும், அதற்கு மாற்றாக எந்த சாலைகளில் போக்குவரத்தை தொடரலாம் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ இரயில் பணிக்காக 1. ஆர்.கே.சாலை மெட்ரோ நிலையம் 2. திருமயிலை மெட்ரோ நிலையம் மற்றும் 3. மந்தைவெளி மெட்ரோ நிலையங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள சாலைகள் 07.01.2024 முதல் மூடப்படும்.
பகுதி 1: ராயப்பேட்டை ஹை ரோடு
(அஜந்தா சந்திப்பு ஆர்.கே.சாலை முதல் ராயப்பேட்டை ஹை ரோடு வரை)
பகுதி 2: ஆர்.கே.மட் சாலை
(லஸ் சந்திப்பு முதல் திருமயிலை எம்ஆர்டிஎஸ் வரை )
பகுதி 3: ஆர்கே மட் சாலை
(திருவேங்கடம் தெரு சந்திப்பு முதல் கிரேஸ் சூப்பர் மார்க்கெட் வரை)
மேற்கண்ட சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்காக பின்வரும் மாற்றுப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மாற்றம் செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள் பின்வருமாறு:-
மேலும் படிக்க | கொரியா செல்வதற்காக வீட்டை விட்டு வந்த 3 சிறுமிகள்!
பகுதி 1: ராயப்பேட்டை ஹை ரோடு (அஜந்தா சந்திப்பு ஆர்.கே.சாலை முதல் ராயப்பேட்டை ஹை ரோடு வரை)
GRH பாயிண்டில் இருந்து அஜந்தா சந்திப்பு வழியாக ஆர்.கே.சாலைக்கு (ராயப்பேட்டை முதல் சந்திப்பு வரை) வரும் வாகனங்கள் வி.பி ராமன் சாலை வலது- நீதிபதி ஜம்புலிங்கம் தெரு - வலது - ஆர்.கே.சாலை நோக்கி திருப்பி விடப்பட்டன.
ராயப்பேட்டை ஹை ரோட்டிலிருந்து GRH நோக்கி வரும் வாகனங்கள் ராயப்பேட்டை பாலம் சர்வீஸ் சாலை-இடது நீலகிரிஸ் கடை - மியூசிக் அகாடமி சர்வீஸ் சாலை வலது TTK சாலை கௌடியா மட சாலை வரை செல்லும்.
வி.பி.ராமன் சாலை (வி.எம். தெரு சந்திப்பு முதல் நீதிபதி ஜம்புலிங்கம் தெரு வரை), வி.எம்.தெரு. நீதிபதி ஜம்புலிங்கம் தெரு ஆகியவை அனைத்தும் ஒரு வழிப்பாதையாக செயல்படும். அஜந்தா சந்திப்பில் இருந்து அ.தி.மு.க. கட்சி அலுவலகம் வழியாக இந்தியன் வங்கி சந்திப்பு வரை கனரக வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
பகுதி 2:- ஆர்.கே.மட் சாலை (லஸ் சந்திப்பு முதல் திருமயிலை எம்ஆர்டிஎஸ் வரை )
ஆர்.கே.சாலை, ராயப்பேட்டை ஹை ரோட்டில் இருந்து லஸ் சந்திப்பு வழியாக மந்தைவெளி சந்திப்பு நோக்கி வரும் வாகனங்கள் லஸ் சந்திப்பில் திருப்பி விடப்படும் -
வலது லஸ் சர்ச் சாலை- டி 'சில்வா சாலை பக்தவச்சலம் தெரு- வாரன் சாலை-செயின்ட் மேரி சாலை இடதுபுறம் திரும்பி - சி.பி இராமசாமி சாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
ஆர்.கே.மட் சாலையில் இருந்து ராயப்பேட்டை ஹைரோடு நோக்கி வரும் வாகனங்கள், வெங்கடேச அக்ரஹாரம் தெருவில் (சாய்பாபா கோயில் தெரு) -இடதுபுறம் - ரங்கா சாலை வலது கிழக்கு அபிராமபுரம் 1வது தெரு- லஸ் அவென்யூ லஸ் சர்ச் சாலை வழியாக - பி.எஸ்.சிவசாமி சாலை -வலது சுலிவன் கார்டன் தெரு -இடது ராயப்பேட்டை உயர் சாலை வழியாக செல்லலாம்.
கிழக்கு மாட தெரு, வெங்கடேச அக்ரகாரம் தெரு (சாய்பாபா கோவில் தெரு).
டாக்டர்.ரங்கா சாலை முதல் கிழக்கு அபிராமபுரம் 1வது தெரு. லஸ் அவென்யூ 1வது தெரு. லஸ் அவென்யூ. முண்டக்கன்னியம்மன் கோயில் தெரு ஆகியவை அனைத்து வாகனங்களுக்கும் ஒரு வழிப்பாதையாக மாற்றம் செய்யப்படும்.
சி.பி.கோயில் சந்திப்பில் இருந்து ஆர்.கே.மட் சாலை சந்திப்பு வரை வடக்கு மாட தெரு வரை இரு வழிப்பாதையாக அனுமதிக்கப்படும். மயிலாப்பூரில் இருந்து ஆர்.கே.மட் சாலை வழியாக புறப்படும் MTC மினி பேருந்துகள் மந்தைவெளி தபால் நிலையம்- மந்தைவெளி தெரு- வலது- நார்டன் சாலை இடதுபுறம் திரும்பி - தெற்கு கால்வாய் கரை சாலையில் இடதுபுறமாக செல்லலாம்.
பகுதி 3:- ஆர்கே மட் சாலை (திருவேங்கடம் தெரு சந்திப்பு முதல் கிரேஸ் சூப்பர் மார்க்கெட் வரை)
வாரன் சாலையில் இருந்து வரும் வாகனங்கள்- வலதுபுறம் திரும்பி செயின்ட் மேரிஸ் சாலை இடதுபுறம் திரும்பி -சிபி ராமசாமி சாலை காளியப்பா சந்திப்பு - நேராக ஆர் ஏ புரம் 3 வது குறுக்குத் தெரு சென்று காமராஜர் சாலை ஸ்ரீநிவாசா அவென்யூ கிரீன்வேஸ் சந்திப்பை நோக்கி ஆர் கே மட் சாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
கிரீன்வேஸ் சந்திப்பில் இருந்து மந்தைவெளிக்கு வரும் வாகனங்கள் ஆர்.கே.மட்ட
சாலை - இடது - திருவேங்கடம் தெரு - திருவேங்கடம் தெரு விரிவாக்கம் - வி.கே. ஐயர்
சாலை - தேவநாதன் தெரு வலது செயின்ட் மேரிஸ் சாலை இடது - ஆர். கே மட சாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
மந்தைவெளி செல்லும் MTC பேருந்துகள் - வாரன் சாலை இடதுபுறம் செயின்ட் மேரிஸ் சாலை வலதுபுறம் திரும்பி - சிருங்கேரி மட சாலை மற்றும் VK ஐயர் சாலை வழியாக மந்தைவெளி பேருந்து நிலையத்தை அடையலாம்.
ஸ்ரீனிவாசா அவென்யூ, திருவேங்கடம் தெரு. திருவேங்கடம் தெரு எக்ஸ்டிஎன். பள்ளி சாலை, ஆகியவை ஒருவழிப்பாதையாக செயல்படும்.
மெட்ரோ இரயில் நிர்வாகம், பொதுமக்களும் வாகன ஓட்டிகளும், மேற்கண்ட் போக்குவரத்து மாற்றத்திற்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும் படிக்க | ஒரே நாளில் 774 பேருக்கு கொரோனா தொற்று!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ