Weather Forecast: தமிழகத்தின் 13 மாவட்டங்களில் மழை பெய்யலாம் வானிலை மையம் கணிப்பு

இன்று தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 22, 2021, 06:41 AM IST
  • தமிழகத்தின் 13 மாவட்டங்களில் மழை பெய்யலாம்
  • இன்று முதல் மூன்று தினங்களுக்கு மழை பெய்யலாம்
  • சென்னை வானிலை மையம் கணிப்பு
Weather Forecast: தமிழகத்தின் 13 மாவட்டங்களில் மழை பெய்யலாம் வானிலை மையம் கணிப்பு title=

சென்னை: இன்று தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் (Chennai Meteorological Department) அறிவித்துள்ளது. இன்று முதல் மூன்று நாட்களுக்கு அதாவது நாளை மறுநாள் வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெயா வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை  வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

வளிமண்டல மேலடுக்கில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாக கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, நெல்லை, சேலம், தேனி, நீலகிரி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு பெய்யும் வாய்ப்புள்ளது. தொடர்ந்து 22ம் தேதியன்று தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய  மிதமான மழை பெய்யக்கூடும். 

Also Read | India-Pakistan war 50 ஆண்டு நிறைவடைவு, கோவையில் விமான சாகசக் காட்சிகள்  

23ம் தேதியன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில், ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும். 24ம் தேதி மற்றும் 25ம் தேதிகளில் 23ம் தேதி தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில், சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். அடுத்த 48 மணி நேரத்திற்கும் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read | பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறலுக்கு இந்திய ராணுவம் பதிலடி

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News