கிழக்கு திசை காற்று வலுப்பெற்று வருவதால் தமிழகத்தில் ஒர் இரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 5 நாட்களில் துவங்கும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில், கிழக்கு திசை காற்று வலுப்பெற்று வருவதால் தமிழகத்தில் ஒர் இரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் இயக்குனர் கூறுகையில்...!
பருவமழை துவங்குவதற்கு முன்பாக கிழக்கு திசைக்காற்று வலுப்பெறும்,அந்த வகையில் தற்போது வலுப்பெற துவங்கி உள்ளது இந்த நிலையானது மேலும் வலுப்பெற்று அடுத்த 5 தினங்களில் பருவமழை தொடங்குவதற்கான சூழலை ஏற்படுத்தும், இதன் காரணமாகவும், வெப்பச்சலனம் காரணமாகவும் தமிழகம் மற்றும் புதுவையில் ஒர் இரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதே போல் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது" என தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ராமேஸ்வரத்தில் தலா 7 செ.மீட்டர மழையும் பாம்பன் பகுதிகளில் தலா 5 செ.மீட்டர் மழையும், ராமநாதபுரம் நகர் பகுதிகளில் 4 செ.மீட்டர் மழையும்,திருச்செந்தூரில் தலா 3 செ.மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.
சென்னையை பொருத்த வரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் எனவம், அதிகபட்சமாக 34 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலையாக 25 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.