செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட முடிச்சூர் பகுதியில் வசித்து வருபவர் செல்வகுமார் - ஷாலினி தம்பதியர். இவர்களுக்கு இரண்டு வயதில் தேஜஸ்ரீ என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் தேஜஸ்ரீக்கு இரண்டு நாட்களாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நேற்று இரவு குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அப்பொழுது மருத்துவமனையில் குழந்தையை அனுமதிப்பதற்காக 50 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டும் என மருத்துவ நிர்வாகம் கூறியதை அடுத்து முதலில் பத்தாயிரம் ரூபாயை முன்பணமாக கட்டி குழந்தையை சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
மேலும் படிக்க | தூத்துக்குடியில் காதல் ஜோடி வெட்டிக்கொலை... திருமணமாகி 3 நாள்களில் கொடூரம்!
பின்னர் குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தையை நலமாக இருப்பதாகவும், ஆனால் நான்கிலிருந்து ஐந்து நாட்கள் மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை பெற வேண்டும் எனவும் கூறி அதற்கு எட்டு முதல் 10 லட்சம் வரை செலவாகும் எனவும் குழந்தையின் பெற்றோர்களிடத்தில் கூறியுள்ளனர். இதை கேட்டு குழந்தையின் பெற்றோர்கள் பணத்தை தயார் செய்து கொண்டிருந்த நிலையில் அவர்களுக்கு தெரிந்த அரசு மருத்துவரிடம் ஆலோசித்து குழந்தைக்கு என்ன பிரச்சனை என்பதை தெரிந்து கொள்வதற்காக ரேலா மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களிடம் அரசு மருத்துவர் பேச வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
இதைக் கேட்டு அதெல்லாம் பேச வைக்க முடியாது பத்து நிமிடத்தில் பணத்தை கட்டினாலே அடுத்த கட்ட சிகிச்சை தொடங்கப்படும் என மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர். இதனையடுத்து பெற்றோர்கள் குழந்தையை அரசு மருத்துவமனைக்கு மாற்றப் போவதாக தெரிவிக்கப்பட்டவுடன் குழந்தையின் உடல்நிலை மோசம் அடைந்து கொண்டிருக்கிறது எனக்கு கூறியுள்ளனர். பின்னர் சிறிது நேரத்தில் குழந்தை இறந்து விட்டதாக மருத்துவமனை தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டதாக குழந்தையின் பெற்றோர் தரப்பிலிருந்து கூறப்படுகிறது. இந்நிலையில் குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையில் கதறி அழுத காட்சி காண்போரை கலங்க செய்தது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ