10th வகுப்பு பொதுத்தேர்வில் மொழித்தாள் தேர்வு நேரம் மாற்றம்.....

10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் மொழிப்பாடத் தேர்வுகள் பிற்பகலில் நடைபெறும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 27, 2018, 06:26 AM IST
10th வகுப்பு பொதுத்தேர்வில் மொழித்தாள் தேர்வு நேரம் மாற்றம்..... title=

10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் மொழிப்பாடத் தேர்வுகள் பிற்பகலில் நடைபெறும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

2019 ஆம் ஆண்டு, 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 14 ஆம் தேதி முதல் நடைபெற இருக்கிறது. தேர்வுகள் வழக்கம் போல, காலை 10 மணி முதல் பகல் 12.45 வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. தற்போது தமிழ் முதல் பாகம், இரண்டம் பாகம் மற்றும், ஆங்கிலம் முதல் மற்றும் இரண்டாம் பாகம் ஆகிய 4 தேர்வுகள், மதியம் 2 மணி முதல் மாலை 4.45 வரை நடைபெறும் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. கணிதம், அறிவியல், சமூக அறிவியல் விருப்ப பாடம் ஆகியவை வழக்கம் போல, 10 மணிக்கு துவங்கி பகல் 12.45க்கு முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், தமிழ் முதல் தாள் மார்ச் 14 ஆம் தேதி பிற்பகலிலும், தமிழ் இரண்டாம் தாள் 18 ஆம் தேதி பிற்பகலிலும், ஆங்கிலம் ஒன்றாம் தாள் 20 ஆம் தேதி பிற்பகலிலும், ஆங்கிலம் இரண்டாம் தாள் 22 ஆம் தேதி பிற்பகலில் நடைபெறும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. பிறபாடங்களான, கணிதம், அறிவியல், சமூக அறிவியல் உள்ளிட்ட தேர்வுகள் முறையே 23,25,27,29 ஆகிய நாட்களில் முற்பகலில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

Trending News