இன்றைய வானிலை முன்னறிவிப்பு: 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!!

அதிக காற்று வீசும் என்பதால் ஆந்திர, கர்நாடக, குஜராத் கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

Last Updated : Jul 14, 2020, 01:33 PM IST
இன்றைய வானிலை முன்னறிவிப்பு: 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!! title=

அதிக காற்று வீசும் என்பதால் ஆந்திர, கர்நாடக, குஜராத் கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

தமிழகத்தில் காற்றின் திசைவேகம் மாறுபாடுவதால் அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்கள் தஞ்சாவூர், சேலம், தர்மபுரி மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், திருவள்ளூர், வேலூர், தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 48 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்கள் தஞ்சாவூர் திருவாரூர் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகும்.

READ | மூன்று ஆண்டுகளாக துப்பாக்கி முனையில் சிறுமியை பலாத்காரம் செய்த இளைஞர்!

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக குடியாத்தத்தில் 5 சென்டி மீட்டர் மழையும் பந்தலூரில் 4 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கும். சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக் கூடும் என்பதால் கர்நாடகா முதல் தெற்கு குஜராத் கடற்பகுதி வரையிலும், தென்மேற்கு மத்திய மேற்கு மற்றும் மத்திய கிழக்கு அரபு கடல் பகுதிகளுக்கு வரும் 18ஆம் தேதி வரையும் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.

Trending News