இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி விபின் ராவத் நேற்று குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் காலமானார். அவருடன் பயணித்த அவரது மனைவி மற்றும் 11 பேர் இந்த விபத்தில் பலியாகினர்.
வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள முப்படைகளின் தளபதி விபின் ராவத் உள்ளிட்டோரின் உடல்களை எடுத்துச் செல்ல ராணுவ வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
கோவையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் குன்னூர் வெலிங்டன் ராணுவ கல்லூரிக்கு செல்லும் போது ஏற்பட்ட விபத்தில் முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் புதன்கிழமை பலியாகினர்.
இதையடுத்து வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள அவர்களின் உடல்கள் அங்கிருந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மூன்று ராணுவ வாகனங்கள் மூலம் மெட்ராஸ் ரெஜிமெண்டல் சென்டருக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளன.
ALSO READ: Live: CDS ஜெனரல் பிபின் ராவத்தின் இறுதிப் பயணம்
அங்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், முப்படைகளின் தளபதிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தவுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து ஹெலிகாப்டர் விபத்தில் பலியானவர்களின் உடல்கள் தில்லிக்கு கொண்டு செல்லப்பட உள்ளன.
இதற்கிடையில் இந்த விபத்து குறித்த விசாரணை முழு வீச்சுடன் தொடங்கியுள்ளது. விபத்துக்குள்ளான விமானத்தின் இறுதி நிமிடங்கள் கொண்ட வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு:
குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தின் இறுதி நிமிடங்கள்...! Coonoor Helicopter Crash last minutes#ZeeTamilNews |#Coonoor | #CoonoorCrash | #CoonoorHelicopterCrash | #HelicopterCrash | #helicopter | #helicopter_crash | #Helicoptercrashes | #HelicopterAccident | #helicopters pic.twitter.com/GA4389UAv2
— Zee Hindustan Tamil (@ZHindustanTamil) December 9, 2021
இதற்கிடையில், விமானப் படை தலைமை மார்ஷல் வி. ஆர். சவுத்ரி, குன்னூரில் உள்ள காட்டேரி பகுதியில் விபத்து நடந்த இடத்தில் ஆய்வு செய்தார்.
#NEWSUPDATE | ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தை விமானப்படைத் தளபதி ஆய்வு!
https://t.co/B1PIzxBVCJ #ZeeTamilNews |#Coonoor | #CoonoorCrash | #CoonoorHelicopterCrash | #HelicopterCrash | #helicopter | #helicopter_crash | #Helicoptercrashes | #HelicopterAccident | #helicopters pic.twitter.com/NCdlxhfbNm— Zee Hindustan Tamil (@ZHindustanTamil) December 9, 2021
ALSO READ: New CDS: பிபின் ராவத்தின் பதவி யாருக்கு? முப்படைகளின் புதிய தலைமைத் தளபதி நியமனம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR