கேரள சட்டசபையின் சிறப்பு கூட்டம் இன்று சபாநாயகர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இறைச்சிக்காக மாடுகள் விற்பதற்கு மத்திய அரசு விதித்துள்ள தடை தொடர்பாக விவாதம் நடைபெற்று வருகிறது.
விவாதத்திற்கு பிறகு மத்திய அரசின் தடைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படலாம் எனவும் கூறப்படுகிறது. முதல்வர் பிணராய் விஜயன் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் இந்த சிறப்பு விவாதத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
இறைச்சிக்காக மாடுகள் விற்கப்படுவதற்கு மத்திய அரசு விதித்துள்ள தடைக்கு கேரள அரசு ஏற்கனவே கண்டனத்தையும், எதிர்ப்பையும் தெரிவித்துள்ளது. கேரளாவில் இந்த தடை அமல்படுத்தப்படாது என ஏற்கனவே கேரள அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.