கூட்டுறவு வங்கியில் ₹1 கோடி மோசடி; போலி நகைகளை வைத்த வங்கி காசாளர் கைது!

புதுச்சேரி லாஸ்பேட்டை கூட்டுறவு வங்கியில் ஒரு கோடி ரூபாய் வரை போலி நகை வைத்து மோசடியில் காசாளர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டு, அடமானம் வைக்கப்பட்ட நகைகள் மீட்கப்பட்டது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 24, 2021, 04:08 PM IST
கூட்டுறவு வங்கியில் ₹1 கோடி மோசடி; போலி நகைகளை வைத்த வங்கி காசாளர் கைது! title=

புதுச்சேரி லாஸ்பேட்டை மெயின்ரோட்டில் கூட்டுறவு நகர வங்கியின் கிளை உள்ளது. இந்த வங்கியில் 1500 க்கும் மேற்பட்டோர் தங்களது நகைகளை அடமானம் வைத்து பணம் பெற்றுள்ளனர். கடந்த 18 ம் தேதி ஆறுமுகம் என்பவர் தனது நகையை மீட்டபோது அவரது நகைக்கு பதிலாக வேறு இருந்தததும், அதுவும் போலி நகையாக இருந்ததால் மேலாளரிடம் புகார் அளித்தார். 

இதையடுத்து கூட்டுறவு தலைமை வங்கி அதிகாரிகள் லாஸ்பேட்டை வங்கியில் அடமானம் வைத்த நகைகளை சரிபார்க்கும் பணியை மேற்கொண்டனர். இதில் நகை மோசடி செய்திருந்தது  கண்டறியப்பட்டது. குறிப்பாக 80 நகைப்பைகளில் நகை மாற்றப்பட்டு உள்ளது கண்டறியப்பட்டு, விசாரணை மேற்கொண்டதில்  தலைமை காசாளர் கணேசன் உதவியுடன் உதவி காசாளர் நகைகளை மாற்றி வேறு இடங்களில் அடமானம் வைத்து பணம் பெற்றது தெரியவந்தது.

ALSO READ | சீரியல் சப்தத்தில் பெண்கள் சமையல்..! பட்டப்பகலில் வீடு புகுந்து திருடிய திருடர்கள்

இதைத் தொடர்ந்து தன்வந்திரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. குறிப்பாக மூன்று கிலோ 280 கிராம் தங்க நகைகளை மாற்றி ஒரு கோடியே 19 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்தது கண்டறியப்பட்டதை அடுத்து, தலைமை காசாளர் கணேசன், உதவி காசாளர் விஜயகுமார் ஆகியோரை கைது செய்து நகைகளை மீட்டனர். 

நகைகளை  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்பு பொதுமக்களிடம் ஒப்படைக்க படும் என காவல் ஆய்வாளர் வெங்கடாஜலபதி தெரிவித்துள்ளார். அதனால் பொதுமக்கள் அச்சப்பட தேவையிலை என்று தெரிவித்துள்ளார்.

ALSO READ | பணப்பை என நினைத்து வங்கி ஊழியரின் உணவுப்பையை திருடிய நபர்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News