தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்த ரஜினிகாந்திடம் "ஆதரவு" கேட்போம் BJP நம்பிக்கை

Rajinikanth support BJP? "மோடி ஜி மற்றும் ரஜினிகாந்த் எவ்வளவு நெருக்கமானவர்கள்" என்பது அனைவருக்கும் தெரியும். ரஜினியுடன் கைகோர்த்து மாநிலத்தில் ஒரு சக்தியாக மாற வேண்டும் என்ற நம்பிக்கை உள்ளதாக பாஜக தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Dec 30, 2020, 08:47 PM IST
  • தமிழ்நாட்டில் 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஆதரவை பாஜக நாடலாம்.
  • அரசியல் கட்சியைத் தொடங்க மாட்டேன் என்று அறிவித்த ரஜினிகாந்தை பாராட்டியா ​​சி.டி. ரவி.
  • ரஜினியுடன் கைகோர்த்து மாநிலத்தில் ஒரு சக்தியாக மாற வேண்டும் என்ற நம்பிக்கை உள்ளது.
  • அழகிரி இணைந்தால், நாங்கள் அவரை வரவேற்போம்- தமிழக பாஜக தலைவர் முருகன்.
தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்த ரஜினிகாந்திடம் "ஆதரவு" கேட்போம் BJP நம்பிக்கை title=

BJP seek Rajinikanth Support: தமிழ்நாட்டில் 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஆதரவை நாடலாம் என்று பாஜக இன்று (புதன்கிழமை) தெரிவித்துள்ளது. அதாவது அரசியல் பயணத்தை மேற்கொள்வதற்கான தனது திட்டத்தை கைவிட்டதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்த ஒரு நாள் கழித்து பாஜக தரப்பில் இருந்து இந்த செய்தி வெளியாகியுள்ளது. 

அதிமுகவுடனான கூட்டணி வலுவானது என்று கூறிய, பாஜக தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி, "என்டிஏ (NDA)கூட்டணி என்பது தனது கட்சி (BJP) மற்றும் பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) ஆகியோர் தலைமையில் வழிநடத்தப்பட்டது. மாநிலத்திலும் அதன் அடிப்படையில் தான் தேர்தலில் பாஜக ஈடுபட்டது எனக்கூறியிருப்பது, என்டிஏ கூட்டணி மாநில கட்சிகளால் வழி நடத்தப்படவில்லை என்பதை வெளிப்படையாக அவரின் கருத்து காட்டுகிறது.

இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜகவின் மாநில பொறுப்பாளர் சி.டி. ரவி, "தமிழ்நாட்டில், அதிமுக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (National Democratic Alliance) மிகப்பெரிய பங்காளியாக இருந்தது. இயற்கையாகவே, முதலமைச்சர் அந்தக் கட்சியைச் சேர்ந்தவராக தான் இருப்பார். தற்போதைய முதல்வர் வேட்பாளர் கே. பழனிசாமி தான் எனத் தெரிவித்த அவர், இரு கட்சிகளுக்கிடையிலான உறவுகள் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்தார்.

ALSO READ | ADMK vs BJP: முதல்வர் வேட்பாளரை நாங்கள் தான் முடிவு செய்வோம் -பாஜக உறுதி

ஏப்ரல்-மே மாதங்களில் எதிர்பார்க்கப்படும் தமிழக சட்டசபை தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் (Election Commission) வெளியிட்டவுடன், தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் குறித்து முறையான முடிவு எடுக்கப்படும் என்று அவர் கூறினார். தமிழ் நாட்டில் பாஜகவை வலுப்படுத்துவதற்கான தற்போதைய முயற்சியின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது எனவும் கூறினார்.

ஆனால் அதிமுக (AIADMK) ஏற்கனவே தேர்தல் பிரச்சாரத்தில் தனது முதலமைச்சர் வேட்பாளராக முதல்வர் கே பழனிசாமியை (Edappadi K. Palaniswami) அறிவித்துள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

அரசியல் கட்சியைத் தொடங்க மாட்டேன் என்று அறிவித்த ரஜினிகாந்தை பாராட்டியா ​​சி.டி. ரவி, "அவர் எப்போதும் தேசிய மற்றும் தமிழகத்தின் நலன்களில் அக்கறைக் கொண்டவர் எனக்கூறினார். அவர் ஒரு சிறந்த தலைவர் எனவும் பாராட்டினார்.

பாரதிய ஜனதா கட்சி ரஜினியிடம் ஆதரவைக் கேட்குமா? (BJP seek Rajinikanth support) என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, "நாங்கள் அவரிடம் ஆதரவு கேட்போம் என்று நம்புகிறேன்" என்று பதில் அளித்தார். மேலும் "மோடி ஜி மற்றும் ரஜினிகாந்த் எவ்வளவு நெருக்கமானவர்கள்" என்பது அனைவருக்கும் தெரியும் என்றும் ரவி கூறினார்.

ALSO READ | கட்சி தொடங்கவில்லை; அரசியலுக்கு வரமுடியவில்லை, மன்னியுங்கள்! - ரஜினி யுடர்ன்

அரசியலில் ஈடுபட வேண்டாம் என்ற ரஜினிகாந்தின் முடிவு பாஜகவை பாதிக்கும் என்று எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. ரஜினியுடன் கைகோர்த்து மாநிலத்தில் ஒரு சக்தியாக மாற வேண்டும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் கூறினார். அதேநேரத்தில் தனது தலைமையிலான கூட்டணிக்கு ரஜினிகாந்த் ஆதரவளிப்பார் என்ற கருத்தை அதிமுக வெளிப்படுத்தி உள்ளதையும் மேற்கோள் காட்டினார்.

முன்னதாக தனது கட்சியை அடுத்த மாதம் தொடங்கப்போவதாகவும், அதுக்குறித்து வரும் 31 ஆம் தேதி அறிவிப்பை வெளியிடுவேன் என்று தெரிவித்த நடிகர் ரஜினி (Rajinikanth), தனது உடல் நலத்தை கருத்தில் கொண்டு கட்சி ஆரம்பிக்க போவதில்லை. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ததாகவும், கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு அரசியலில் ஈடுபட மாட்டேன் என நேற்று (செவ்வாய்க்கிழமை) அறிவித்திருந்தார்.

தேர்தல் அரசியலில் நுழையாமல், மக்களுக்கு அனைத்து வழிகளிலும் சேவை செய்வேன் என்ற நடிகர் ரஜினியின் கருத்து, பாஜ கட்சியின் ஒரு பகுதியினரிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் BJP கட்சிக்கு சாதகமாக "குரல் கொடுக்கலாம்" எனவும் செய்திகள் வெளியாகி வருகிறது. அதாவது 1996 இல் திமுக (DMK) கூட்டணிக்கு ரஜினி ஆதரவளித்தது போல, எங்களுக்கும் ஆதரவு அளிக்கலாம் என தமிழக பாஜக நிர்வாகிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

அதேபோல மறைந்த திமுக தலைவரான எம்.கருணாநிதியின் மகன் அழகிரி (MK Alagiri), "ஜனவரி 3 ஆம் தேதி தனது ஆதரவாளர்களுடன் கலந்து ஆலோசித்து, அதன் [பிறகு தனது அரசியல் எதிர்கால நடவடிக்கை குறித்து முடிவு செய்வேன் என்று சில நாட்களுக்கு முன்பு கூறியிருந்தார்.

ALSO READ | பாஜக கட்சியில் இணைந்தார் முன்னாள் கிரிக்கெட் வீரர் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன்

"அவர் (அழகிரி) இணைந்தால், நாங்கள் அவரை வரவேற்போம்" என்று தமிழக பாஜக தலைவர் முருகன் (L Murugan) கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News