பாஜக ஒரு ஆபத்தான கட்சியா? நடிகர் ரஜினிகாந்தின் அதிரடி பதில்: விவரம்

பாஜக ஆபத்தான கட்சி என எதிர்கட்சி கூட்டணிகள் கருதினால், அப்போ கண்டிப்பா அப்படித்தானே இருக்கும் என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Nov 12, 2018, 09:11 PM IST
பாஜக ஒரு ஆபத்தான கட்சியா? நடிகர் ரஜினிகாந்தின் அதிரடி பதில்: விவரம் title=

நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவரிடம் செய்தியாளர்கள் கேள்விகளை எழுப்பினர். அதற்க்கு நடிகர் ரஜினிகாந்த் கூறிய பதில் ஒரு பதில் பெரும் சர்ச்சையை ஏற்ப்படுத்தி உள்ளது.

செய்தியாளர்: ஏழு பேர் விடுதலை தொடர்பான விவகாரத்தில் தமிழக அரசு கோரிக்கையை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் மத்திய அரசே முடிவு செய்து திருப்பி அனுப்பியுள்ளது. இதில் உங்கள் நிலைப்பாடு என்ன? 

ரஜினிகாந்த்: "எந்த ஏழு பேர்? எனக்கு அதுப்பற்றி தெரியாது. இப்பதான் நான் வந்துக்கிட்டு இருக்கேன். இந்த விசியத்தை பற்றி இப்போதுதான் கேள்விப்படுகிறேன்".  

செய்தியாளர்: தமிழகத்தில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்படுகிறார்கள் -இதுகுறித்து உங்கள் கருத்து என்ன? 

ரஜினிகாந்த்: இதுக்கு கடுமையான சட்டங்கள் கொண்டு வரவேண்டும். சட்டம் கொண்டுவந்தால் மட்டும் போதாது, உடனடியாக அமுல்படுத்த வேண்டும்.

செய்தியாளர்: பணமதிப்பிழப்பு நடைமுறை கொண்டுவந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது -அதுக்குறித்து தற்போதைய உங்கள் கருத்து என்ன? 

ரஜினிகாந்த்: பணமதிப்பிழப்பு நடவடிக்கை சரியாக அமல்படுத்தப்படவில்லை. அதைப்பற்றி விரிவாக பேச வேண்டும். ஓகே.

செய்தியாளர்: மீண்டும் ஏழு பேர் விடுதலை குறித்து உங்கள் நிலைப்பாடு என்ன? எனக் கேள்வி எழுப்பட்டது.

ரஜினிகாந்த்: அதுப்பற்றி இப்பதான் கேள்விப்பட்டு இருக்கேன்......

செய்தியாளர்: பாஜகவுக்கு எதிராக ஒரு மிகப்பெரிய கூட்டணியை உருவாக்க முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. பாஜக கட்சி அந்தளவுக்கு ஒரு ஆபத்தான கட்சியா?

ரஜினிகாந்த்: அப்படினு சொல்லிக்கிட்டு (பாஜக ஆபத்தான கட்சி) இவங்க (பாஜகவுக்கு எதிரான கூட்டணி) நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். அப்போ கண்டிப்பா அப்படித்தானே இருக்க முடியும் (பாஜக ஆபத்தான கட்சியாக தான் இருக்க முடியும்). ஓகே.... நன்றி.

Trending News