தேமுதிகவுக்கு மாநிலங்களவை எம்பி சீட் கொடுக்க முடியாது - பாஜக அறிவிப்பு

பாஜக - தேமுதிக கூட்டணி: தேமுதிகவின் மாநிலங்களவை எம்பி சீட் கனவுக்கு முட்டுக்கட்டை போட்டுள்ளது பாஜக. மாநிலங்களவை எம்பி சீட் கேட்பவர்களுக்கு தங்களது கூட்டணியில் இடமில்லை என அக்கட்சியின் துணை தலைவர் கே.பி.ராமலிங்கம் அறிவித்துள்ளார்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 11, 2024, 10:11 AM IST
  • தமிழ்நாடு பாஜக கூட்டணியில் யார்?
  • தேர்தலில் தாமரை சின்னத்தில் போட்டியிட வேண்டும்
  • மாநிலங்களவை சீட் கேட்பவர்களுக்கு கூட்டணியில் இடமில்லை
தேமுதிகவுக்கு மாநிலங்களவை எம்பி சீட் கொடுக்க முடியாது - பாஜக அறிவிப்பு title=

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான கூட்டணி பேச்சுவார்த்தைகள் தமிழ்நாட்டில் படுஜோராக நடந்து கொண்டிருக்கும் நிலையில், தேமுதிகவுக்கு பாஜக செக் வைத்துள்ளது. கூட்டணி குறித்து அண்மையில் பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, 14 மக்களவை தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் சீட் கொடுப்பவர்களுடன் மட்டுமே கூட்டணி என அதிரடியாக அறிவித்தார். ஆனால், மாநிலங்களவை உறுப்பினர் சீட் கேட்பவர்களுக்கு தங்களது கூட்டணியில் இடமில்லை என அதிரடியாக அறிவித்துள்ளது தமிழ்நாடு பாஜக. மேலும், கூட்டணியில் இணைபவர்கள் பாஜகவின் சின்னமான தாமரை சின்னத்தில் போட்டியிட வேண்டும் எனவும் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க | அரக்கோணம் தொகுதியின் திமுக வேட்பாளர் இவரா?

இந்த அறிவிப்பை வெளியிட்டது தமிழக பா.ஜ.க துணை தலைவர் கே.பி.ராமலிங்கம். நாமக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாஜக தேர்தல் பணி மற்றும் கூட்டணி தொடர்பான பல்வேறு விஷயங்களை பேசினார். நாமக்கல்லில் மாவட்ட பாஜக அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக மாவட்ட தலைவர்கள் சத்தியமூர்த்தி, ராஜேஷ்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் தமிழக பா.ஜ.க துணை தலைவர் கே.பி.ராமலிங்கம் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இந்த கூட்டத்திற்கு பின் தமிழக பா.ஜ.க துணை தலைவர் கே.பி.ராமலிங்கம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். 

அப்போது அவர் பேசும்போது, " தமிழகம் முழுவதும் 39 தொகுதிகளில் தாமரை சின்னத்தில் போட்டியிடுவோம். மாநிலங்களவை உறுப்பினர் பதவி கேட்பவர்களுக்கு எங்களது கூட்டணியில் இடமில்லை என்பது பாஜக தொண்டர்களின் எண்ணமாக உள்ளது. 2024-ஆம் எம்.பி தேர்தலுக்கு பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும். திமுக, அதிமுகவை சேர்ந்த எம்.எல்.ஏக்கள் பாஜகவிற்கு வருவார்கள். முன்னாள் எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள் பாஜகவிற்கு வந்தது என்பது மோடிக்கு ஆதரவு மற்றும் சமூதாய  பணி செய்யவே என அவர்களே சொல்கின்றார்கள். ஊழலை ஒழிக்க வேண்டும் என்பவர்கள் எங்களிடம் லேகியம் வாங்கி சாப்பிடுகிறார்கள். 

நாடாளுமன்ற தேர்தலில் இருப்பது 2 அணி தான், அது பாரத பிரதமராக மோடி வேண்டுமா?, வேண்டாமா?. மீண்டும் பிரதமராக மோடி ஆட்சிப் பொறுப்பில் அமருவது உறுதி” என்றார். அதாவது இந்த பேட்டியில் தேமுதிகவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் சீட் எல்லாம் கொடுக்க முடியாது, விரும்பினால் பாஜக கூட்டணியில் இணைந்து தாமரை சின்னத்தில் போட்டியிடுங்கள் என பகிரங்கமாகவே பாஜக தரப்பில் இருந்து சிக்னல் கொடுக்கப்பட்டிருக்கிறது. பாஜக மாநில துணை தலைவர் இப்படி சொல்கிறார் என்றால் நிச்சயம் அது தமிழ்நாடு பாஜக தலைவரை ஆலோசிக்காமல் இப்படி பேசியிருக்க முடியாது என்பதால், தேமுதிக என்ன செய்யலாம்? என்ற ஆலோசனையில் இறங்கியிருக்கிறதாம். 

மேலும் படிக்க | கோவை கார் வெடிகுண்டு விபத்து: தொடரும் என்.ஐ.ஏ அதிகாரிகளின் சோதனை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News