பொருளாதார வளர்ச்சியில் பாஜக அரசு கவனம் செலுத்தாததால், இந்திய பொருளாதாரம் ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
பொருளாதார வளர்ச்சியில் பாஜக அரசு கவனம் செலுத்தாததால், இந்திய பொருளாதாரம் ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்திய பொருளாதார வளர்ச்சி 4.5% ஆக சரிந்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் எச்சரித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இதற்கு மத்திய அரசை குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில்,
அதிமுக அரசின் நிர்வாக திறமின்மையால் தமிழக வளர்ச்சியும் குன்றியுள்ளதாக சாடியுள்ளார். நாட்டின் வளர்ச்சி 4.5 சதவீதமாக சரிந்து இந்திய பொருளாதாரம் ஆபத்தான நிலையில் உள்ளதாக சர்வதேச பண நிதியமும், பொருளாதார வல்லுநர்களும் எச்சரித்துள்ளதாக கூறியுள்ளார்.
பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாண்டு மக்களைப் போராடத் தூண்டுவது, பின் அதை ஒடுக்குவது போன்ற நடவடிக்கைகளை கைவிட வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார். நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் பாஜக அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றும் இதைத்தான், அமைதியை விரும்பும் மக்கள் மத்திய, மாநில அரசுகளிடமிருந்து எதிர்ப்பார்ப்பதாகவும் வலியுறுத்தியுள்ளார்.
வளர்ச்சி 4.5% ஆகச் சரிந்து #IndianEconomy ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாக IMF-ம் , பொருளாதார வல்லுநர்களும் எச்சரிக்கின்றனர்.
6 ஆண்டுகால பாஜக ஆட்சி, பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்தாதன் அடையாளம் இது.
அதிமுக அரசின் நிர்வாக திறமின்மையால் தமிழக வளர்ச்சியும் குன்றியுள்ளது!
— M.K.Stalin (@mkstalin) December 25, 2019
பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாண்டு மக்களைப் போராடத் தூண்டுவது, பின் அதை ஒடுக்குவது போன்ற #AntiPeople நடவடிக்கைகளை கைவிட்டு, நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் #BJP அரசு கவனம் செலுத்த வேண்டும்.
அமைதியை விரும்பும் மக்கள்-
மத்திய, மாநில அரசுகளிடம் எதிர்பார்ப்பது அதனை தான்!— M.K.Stalin (@mkstalin) December 25, 2019
என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.