கோயில் திருவிழாவில் பக்தர்களுக்கு சுடச்சுட பிரியாணி பிரசாதம்!!

மதுரை திருமலங்கம் அருகே முனியாண்டி உணவக சமூகத்தினர் சார்பில் பிரியாணி திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. 

Last Updated : Jan 26, 2019, 03:07 PM IST
கோயில் திருவிழாவில் பக்தர்களுக்கு சுடச்சுட பிரியாணி பிரசாதம்!!  title=

மதுரை திருமலங்கம் அருகே முனியாண்டி உணவக சமூகத்தினர் சார்பில் பிரியாணி திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. 

அசைவ உணவுக்கு புகழ் பெற்ற முடியாண்டி விலாஸ் உணவு விடுதிகளை நடத்துபவர்கள் மதுரை வடக்கம்பட்டி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்தவர்கள். தமிழகம் எங்கும் உள்ள முனியாண்டி விலாஸ் உணவகங்களின் உரிமையாளர்கள் தங்களது வாழ்வாதாரத்தை காக்க வேண்டி, வடக்கம்பட்டி முனியாண்டி கோவிலில் ஆண்டுதோறும் திருவிழாவை நடத்தி வருகின்றன. 

அந்த வகையில் இந்த ஆண்டு நடந்த இந்த விழாவில் தமிழகம், ஆந்திரா, கேரளா, சிங்கப்பூர், துபாயில் முடியாண்டி விலாஸ் ஹோட்டல் நடத்தி வருபவர்கள், குடும்பத்துடன் வந்து கலந்து கொண்டனர். மேலும் பக்தர்கள், பால் குடம் எடுத்து முடியாண்டி சாமிக்கு அபிஷேகம் செய்தனர். பின்னர், அரிசி மூட்டைகள், கோவிலுக்கு காணிக்கையாக அளிக்கப்பட்டிருந்த ஆடுகள் மற்றும் கோழிகளை பிரியாணியாக சமைத்து சாமிக்கு படைத்தனர். சமைத்த அந்த பிரியாணி ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. 

Trending News