'ரூ.1000 வந்துவிட்டது, அந்த ரூ. 15 லட்சம்...' பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி!

CM Stalin Attack On PM Modi: பிரதமரே நீங்கள் கொடுத்த வாக்குறுதி ஒன்றையாவது நிறைவேற்றியிருக்கிறீர்களா என்றும் கடந்த 9 ஆண்டுகளில் இந்தியாவின் கடன் சுமை அதிகரித்துள்ளது என்றும் திமுகவின் முப்பெரும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

Written by - Sudharsan G | Last Updated : Sep 17, 2023, 11:44 PM IST
  • ஜனநாயகத்தை காக்கும் அரணமாக திமுக செயல்பட்டு கொண்டிருக்கிறது - ஸ்டாலின்
  • மத்திய அரசு 9 ஆண்டுகளில் 155 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளது - ஸ்டாலின்
  • பாஜகவின் ஊழல் முகத்தை கிழித்து அம்பலப்படுத்தி ஆக வேண்டும் - ஸ்டாலின்
'ரூ.1000 வந்துவிட்டது, அந்த ரூ. 15 லட்சம்...' பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி! title=

CM Stalin Attack On PM Modi: வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா கந்தனேரியில் திமுகவின் முப்பெரும் விழா மற்றும் பவள விழா தமிழக நீர் வளத்துறை அமைச்சர் மற்றும் திமுக பொதுசெயலாளர் துரைமுருகன் தலைமையில் இன்று (செப். 17) நடைபெற்றது இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். 

இந்த விழாவில் திமுக மாவட்ட செயலாளர் சட்டப்பேரவை உறுப்பினர் நந்தகுமார், திமுக பொருளாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு, விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும், திமுக பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

கண்ணீர் விட்டு அழுத துரைமுருகன்

இவ்விழாவில் 'மக்களுடன் ஸ்டாலின்' என்ற மொபைல் செயலியை அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்தார். மேலும் இந்த விழாவில் கலைஞர் விருது இ.பெரியசாமிக்கும், பெரியார் விருது மயிலாடுதுறை கி.சத்தியசீலனுக்கும், அண்ணா விருது மீஞ்சூர் க.சுந்தரதிர்க்கும், பாவேந்தர் விருது தென்காசி மலிகா கதிரவனுக்கும், பேராசிரியர் விருது பெங்களூர் ந.இராமசாமிக்கும் என ஐந்து விருதுகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். 

பின்னர் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,"பல்வேறு சிறப்புகளை கொண்ட, வீரம் விளைந்த வேலூரில் திமுகவின் முப்பெரும் விழா நடைபெறுகிறது. நானும், துரைமுருகனும் கருணாநிதியால் வார்க்கப்பட்டவர்கள். முக்கிய பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும் என்னை வழிநடத்துபவர் துரைமுருகன். விழாவிற்கான ஏற்பாடுகளை செய்தவர்களுக்கு பாராட்டுகள். கொட்டும் மழையில் பிறந்ததால்தான் திமுக வேகமாக வளர்ந்து வருகிறது" என்றார். தன்னை பற்றி முதலமைச்சர் பேச பேச உணர்ச்சிவசப்பட்டு மேடையிலேயே அமைச்சர் துரைமுருகன் கண்ணீர் விட்டு அழுதார். 

மேலும் படிக்க | திமுகவின் கைக்கூலியாக மாறும் அண்ணாமலை... போட்டுத்தாக்கும் அதிமுகவின் சி.வி.சண்முகம்

ஜிஎஸ்டியால் வந்த வினை

திமுகவை வாழ வைத்துக் கொண்டிருப்பது தொண்டர்கள்தான். திமுகவின் வளர்ச்சிக்கு தொண்டர்கள்தான் காரணம். தொண்டர்களால் உருவாக்கப்பட்டவன் நான். ஒரு குடும்பத்தின் தாய், தந்தையை போன்றவர்கள்தான் கட்சியின் முன்னோடிகள். 2 கோடி கொள்கை வாதிகள் நிறைந்ததுதான் திமுக. மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தை தலைச்சிறந்த மாநிலமாக உருவாக்கி வருகிறோம். 

நாம் மிக மிக முக்கியமான காலகட்டத்தில் இருக்கிறோம். இந்திய ஜனநாயகத்தை காக்கும் போர்களத்தில் இருந்து பவள விழாவை நடத்துகிறோம். காவல் அரணாக திமுக செயல்பட்டு கொண்டிருக்கிறது. மாநில அரசை நடத்த தேவையானது நிதி ஆதாரம். ஆனால் ஜிஎஸ்டியை கொண்டு வந்து மாநில அரசின் நிதி ஆதாரத்தை மத்திய அரசு கபளிகரம் செய்துள்ளது. கல்வி சுகாதாரம் ஆகியவைகளை செய்து தர நிதி வேண்டும். ஆனால் அதை எல்லாம் மத்திய அரசு செய்ய தடுக்கும் வகையில் ஜிஎஸ்டியை கொண்டு வந்தது அதன் வரி வருவாயையும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு பிரித்து தருவதில்லை.

மேலும் படிக்க | 2026-ல் தமிழ்நாட்டில் பாஜக தான் ஆட்சி அமைக்கும் - அண்ணாமலை சவால்

'சொன்னதை செய்தீர்களா'

புதிய கல்வி கொள்கை மூலம் மாநில கல்வி  வளர்ச்சியை தடுக்க பார்க்கின்றனர். மாநில அரசின் கல்வி வளர்ச்சியை முடக்குகின்றனர். மாணவர்களின் கனவை சிதைக்க கொண்டு வரப்பட்டது. நீட் தேர்வு மாணவர்களும் ஏராளமாக நீட்டால் உயிரிழந்துள்ளனர். 'முதல்வர் சொன்ன ஆயிரம் வந்துவிட்டது, ஆனால் பிரதமர் வங்கி கணக்கில் போடுவதாக சொன்ன ரூ.15 லட்சம் என்ன ஆனது' என மீம்ஸ்கள் வருகிறது. பிரதமரே நீங்கள் கொடுத்த வாக்குறுதி ஒன்றையாவது நிறைவேற்றியிருக்கிறீர்களா. 2015ஆம் ஆண்டு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல்லை நாட்டினார்கள். ஆனால் இப்போது டெண்டர் விட்டுள்ளனர். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. 

இது தான் பிரதமர் மோடி அரசின் சாதனை

மத்திய அரசு அதன் பிரச்னைகளை மறைக்கவே மற்ற பிரச்சனைகளை கிளப்பி குளிர் காய பார்க்கிறார்கள். 9 ஆண்டுகளின் மத்திய அரசு என்ன சாதனை செய்தது என்றால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை உயர்த்தியது தான். மத்திய அரசு 9 ஆண்டுகளில் 155 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளது பெரிய நிறுவனங்களுக்கு மட்டும் வாரா கடன் தள்ளுபடி என மக்களுக்கு வேதனை அளிக்கிறது. அதிகம் பாஜக ஆட்சியில் ஊழல் செய்தது யார் என்றால் சிபிஐ அதிகாரிகள் தான், ஊழலை மறைக்க பார்க்கிறார்கள். 

பாஜகவின் ஊழல் முகத்தை கிழித்து அம்பலப்படுத்தி ஆக வேண்டும். பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் நாம் தான் வெற்றி பெற போகிறோம். இந்தியா முழுவதும் வெற்றி பெறவே இந்தியா கூட்டணியை உருவாக்கியுள்ளோம். நாம் ஆட்சி அமைத்தால் தமிழகத்திற்கு தேவையான அனைத்தையும் செய்ய இந்தியா கூட்டணியால் முடியும். பொற்காலத்தை உருவாக்க நாடாளுமன்ற தேர்தல் வருகிறது.

இந்தியாவை காக்க இந்தியா கூட்டணியை வெற்றிபெற வைக்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் 40-40 வெற்றி பெற வேண்டும். இந்திய நாடாளுமன்றத்தில் கூட்டணி கட்சி அதிகாரத்தை செலுத்த வேண்டும். இங்கு அமல்படுத்தும் திராவிட மாடலை பல மாநிலங்களுக்கும் கொண்டு சேர்க்க முடியும்" என்றார். 

மேலும் படிக்க | ஆளுநர் என்பதால் என்னிடம் கேட்கக்கூடாது : இல.கணேசன்
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News