பழனிசாமி தரப்புக்கு இரட்டை இலை! அதிமுகவின் பொதுச்செயலாளராக அங்கீகரித்த இந்திய தேர்தல் ஆணையம்

ADMK General Secretary EPS: பதவி நீக்கம் செய்யப்பட்ட தலைவர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பெரும் பின்னடைவு. அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமியை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்து.

Written by - Shiva Murugesan | Last Updated : Apr 20, 2023, 01:46 PM IST
  • அதிமுகவின் பொதுச் செயலாளராக பழனிசாமியை அங்கீகரித்து தேர்தல் ஆணையம்.
  • பதவி நீக்கம் செய்யப்பட்ட ஓ பன்னீர்செல்வத்துக்கு பெரும் பின்னடைவு.
  • கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட இரண்டு இலை சின்னம் ஒதுக்கம்.
பழனிசாமி தரப்புக்கு இரட்டை இலை! அதிமுகவின் பொதுச்செயலாளராக அங்கீகரித்த இந்திய தேர்தல் ஆணையம் title=

Edappadi K Palaniswami: அதிமுகவின் பொதுச்செயலாளராக தன்னை அங்கீகரிக்க வேண்டும். அதேப்போன்று கட்சி விதிகளில் செய்யப்பட்ட திருத்தங்கள் ஆகியவற்றை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க வேண்டும். அதனுடன் கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் அதிமுக கட்சி போட்டியிட அனுமதி வழங்க வேண்டும் உட்ப்ட சில கோரிக்கைகள் வைத்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை கடந்த 12 ஆம் தேதி விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், அடுத்த பத்து நாட்களில் இந்த விவகாரம் தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் முடிவெடுத்து அறிவிப்பை வெளியிட வேண்டும் என உத்தரவிட்டது.

எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்த தேர்தல் ஆணையம்:
டெல்லி உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவை அடுத்து, உயர்மட்ட தேர்தல் அதிகாரிகள் தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்ட வந்த நிலையில், இன்று அதிமுக பொதுக் குழு தீர்மானங்களை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டு உள்ளது என தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. இதனையடுத்து எடப்பாடி பழனிசாமிக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்தது.

ஓ பன்னீர்செல்வத்துக்கு பெரும் பின்னடைவு:
கர்நாடகா சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் புலகேசி நகர் தொகுதிக்கு அன்பரசனை வேட்பாளராக புதன்கிழமை (ஏப்ரல் 19) எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதே புலிகேசி நகர் தொகுதியில் ஓபிஎஸ் சார்பில் அம்மாநில மாணவர் அணி செயலாளர் நெடுஞ்செழியன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது.

மேலும் படிக்க: கர்நாடக சட்டமன்றத் தேர்தல்: பாஜகவிற்கு எதிராக களமிறங்குகிறது அதிமுக - எடப்பாடியின் ஸ்கெட்ச் என்ன?

இதற்கிடையில் அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமியை அங்கீகரித்து, வரும் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட இரண்டு இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பால், பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வத்துக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமான தீர்ப்பு:
கடந்த ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. ஆனால் அந்த வழக்கு விசாரணை இறுதியில் அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.

மேலும் படிக்க: அண்ணாமலை என்ன பேயா... பிசாசா... எங்களுக்கு பயமில்லை - ஜெயக்குமார்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News