இந்திய ரயில்வே நீண்ட பயணங்களுக்கு மிகவும் சிக்கனமானதாகவும், பாதுகாப்பானதாகவும் பயணிகளால் கருதப்படுகிறது. அதில் பயணம் செய்வது மிகவும் வசதியானது எனவும் பெரும்பாலான பயணிகள் நினைக்கின்றனர். இதனால் தான், இந்திய ரயில்வேயில் தினமும் கோடிக்கணக்கான மக்கள் பயணிக்கின்றனர். பேருந்து, விமானம் போன்றவை உள்நாட்டு போக்குவரத்தில் பங்களித்தாலும், இந்தியாவின் மூலை முடுக்குவரை இந்தியன் ரயில்வேயில் இணைப்பு உள்ளதால், நடுத்தர வர்க்க பயணிகள் ரயிலையே தேர்வு செய்கின்றனர்.
இந்த நிலையில் சென்னை - மாமல்லபுரம் - புதுச்சேரி - கடலூர் வரை 179 கி.மீ. (கிலோமீட்டர்) தொலைவுக்கு ரயில் பாதை அமைக்க, கடந்த 2007 ஆம் ஆண்டில் ரயில்வே ஒப்புதல் அளித்தது. பல ஆண்டுகளாக கிடப்பில் இருந்ததால், இந்த திட்டப் பணியின் மதிப்பீடு, 1,500 கோடி ரூபாயை தாண்டியுள்ளது.
அதன்படி தற்போது இந்த திட்டத்தில் சிறிய மாற்றம் செய்து, சென்னை பறக்கும் ரயில் நிலையம் உள்ள பெருங்குடியில் இருந்து மாமல்லபுரம் - புதுச்சேரி - கடலூருக்கு புதிய ரயில் பாதை அமைக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் சிலர் கூறியதாவது., சென்னை பெருங்குடியில் இருந்து கிழக்கு கடற்கரை சாலையின் வலது பக்கமாகவே, இந்த ரயில் பாதை அமையும். இதுமட்டுமில்லாமல், செங்கல்பட்டில் இருந்து மாமல்லபுரத்துக்கு இணைப்பு ரயில் பாதையும் அமைக்கப்படும். அத்துடன் பயணிகளுக்கான ரயில்கள் பெருங்குடி வழியாகவும், மறுபுறம் சரக்கு ரயில்கள் செங்கல்பட்டு வழியாகவும் இயக்கப்படும்.
மேலும் படிக்க | தற்கொலைக்கு தூண்டினாரா ககன் தீப் சிங்? ஐஏஎஸ் அதிகாரியின் பதறவைக்கும் குற்றச்சாட்டு!
இந்த திட்டத்துக்கான முதல்கட்ட சர்வே பணிகளை மேற்கொள்ள தனியார் நிறுவனத்தை தேர்வு செய்யும் பணி முடியும் நிலையில் உள்ளது. அந்த நிறுவனம் மூன்று மாதங்களில் ஆய்வை முடித்து, ரயில்வேயிடம் அறிக்கை சமர்ப்பிக்கும். இந்த திட்டத்தை செயல்படுத்த ரூ.1,599 கோடிசெலவாகும். மேலும் இந்த திட்டத்துக்கான வழித்தட அமைப்பு, ரயில் நிலையங்கள் அமையும் இடங்கள், தேவையான இடங்கள் உள்ளிட்ட விவரங்கள் அந்த ஆய்வு அறிக்கையில் இடம்பெறும். ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்த பிறகு, படிப்படியாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
முன்னதாக பெங்களூரு மாநகரங்களுக்கு இடையே அதிவிரைவு போக்குவரத்து என்பது அத்தியாவசியத் தேவையாக உள்ளதை கருத்தில் கொண்டு சென்னை - பெங்களூரு இடையே 8 வழித்தடங்களைக் கொண்ட அதிவிரைவு சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த சாலைத் திட்டம் நிறைவேறும் பட்சத்தில் இரு நகரங்களுக்கு இடையிலான பயண நேரம் இரண்டரை மணி நேரமாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த இரண்டு நகரங்களுக்கு இடையிலான ரயில் பயணம் என்பது 4.25 முதல் 6.30 மணி நேரம் கொண்டதாக இருக்கிறது.
இந்நிலையில், இந்த பாதையில் அதிவேக அகல ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் 4 மணி நேரம் 25 நிமிடங்களாக உள்ள (வந்தே பாரத் ரயில்) பயண நேரம் என்பது இரண்டு மணி நேரமாக குறைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ