போகி கொண்டாட்டம்: சென்னையில் புகை மூட்டம்! வாகன ஓட்டிகள் அவதி

சென்னையில் பல இடங்களில் பழைய பொருட்களுடன் டயர், பிளாஸ்டிக் பொருட்களை எரித்ததால் புகை மூட்டமாக காணப்படுகிறது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 13, 2021, 10:40 AM IST
போகி கொண்டாட்டம்: சென்னையில் புகை மூட்டம்! வாகன ஓட்டிகள் அவதி title=

தமிழகம் முழுவதும் இன்று போகி பண்டிகை உற்சாக கொண்டாப்படுகிறது. போகி பண்டிகையின் போது பழைய பொருட்களை தீ வைத்து எரிப்பார்கள். ‘பழையன கழிதலும்.. புதியன புகுதலும்’ என்ற சான்றோர் வாக்கின்படி, பொங்கல் பண்டிகைக்காக வீட்டை சுத்தம் செய்யும்போது, வீட்டில் இருக்கும் தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தி தீயிட்டு கொளுத்துகின்றனர். பொருட்களை எரித்து, மேளம் அடித்து சிறுவர்கள் உற்சாகமாக போகியை வரவேற்றனர்.

சென்னையில் (Chennai) ஒவ்வொரு ஆண்டும் போகி (Bhogi) பண்டிகையின் போதும் காற்று மாசு கடுமையாக அதிகரிக்கும். அந்த வகையில் இன்றும் கடுமையாக காற்று மாசு அதிகரித்துள்ளது. அதிகாலையில் பழைய பொருட்களை ஆங்காங்கே சேகரித்து எரித்ததால் கடும் புகை மூட்டம் ஏற்பட்டது. பனி மூட்டத்துடன் (Smog) இந்த புகையும் சேர்ந்ததால் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளது. 

பழையன கழிதலும்.. புதியன புகுதலுமான போகிப் பண்டிகை

ALSO READ | பழையன கழிதலும்.. புதியன புகுதலுமான போகி பண்டிகை

கிண்டி கத்திப்பாரா சாலையில் முன்பே செல்லும் வாகனங்கள் செல்வது தெரியாத அளவுக்கு புகை மூட்டம் காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர்.

சென்னை மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதுமே போகி பண்டிகை கொண்டாட்டம் களை கட்டியுள்ளது. கோவை, மதுரை, திருச்சி உள்பட பல நகரங்களில் காற்று மாசு அதிகரித்தது.

ALSO READ | டெல்லி மக்களை மிரட்டும் காற்று மாசு.... 1600-யை தொட்ட AQI குறியீடு..!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News