தமிழகத்தில் 8 பேருக்கு BA5 மற்றும் 4 பேருக்கு BA4 வகை கொரோனா

Corono New Version : தமிழகத்தில் 8 பேருக்கு BA5 மற்றும் 4 பேருக்கு BA4 வகை மரபணு கொரோனா பாதிப்பு உறுதி  செய்யப்பட்டுள்ளன. எந்தளவுக்கு இது தாக்கத்தை ஏற்படுத்தும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்குகிறார்.  

Written by - நவீன் டேரியஸ் | Last Updated : Jun 5, 2022, 03:54 PM IST
  • மீண்டும் ஒரு கொரோனா அலை சாத்தியமா?
  • புதிய வகை கொரோனா பாதிப்பு எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தும் ?
  • சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம்
தமிழகத்தில் 8 பேருக்கு BA5 மற்றும் 4 பேருக்கு BA4  வகை கொரோனா title=

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 

‘தமிழ்நாட்டில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டில் இருந்த நிலையில் சென்னை காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் சற்று அதிகரித்து வருகிறது. வழக்கமான மரபணு பகுப்பாய்வுக்கு 139 மாதிரிகள் அனுப்பப்பட்டன. இதில் 8  பேருக்கு BA5 வகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளன. 

மேலும் படிக்க | எந்த வயதினருக்கு எந்த கொரோனா தடுப்பூசி செலுத்தலாம்?... முழு விளக்கம்

4 பேருக்கு BA4 வகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளன. 8 பேருக்கு BA4 வகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளன. இவை இரண்டுமே ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் ஆகும். மேலும் தமிழ்நாட்டில் முதல் முறையாக BA5 உறுதி செய்யப்பட்டுள்ளது. தெலங்கானா, மகாராஷ்ட்ரா ஆகிய மாநிலங்களில் ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் BA4 மற்றும் BA5 பாதித்த 12 பேரும் குணமடைந்து விட்டனர். கொரோனா நோயாளிகள் 790 பேரில் 46 பேர் தற்போது தமிழ்நாட்டில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 16 பேர் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சையில் உள்ளனர். இதில் 6 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.

முதல் டோஸ் தடுப்பூசியாளர்கள்

தமிழகத்தைப் பொறுத்தவரை 40 லட்சம் பேர்  முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் உள்ளனர். அதே போல 1.21 கோடி நபர்கள் இரண்டாம் தவணை தடுப்பூசி எடுத்துக் கொள்ளவில்லை. பூஸ்டர் டோஸ் தடுப்பூசி  செலுத்தி கொள்ள 26,52,000 தகுதி உள்ள நிலையில் 12, 24,000 நபர்கள்  மட்டுமே பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். 

சென்னையில் மிகவும் குறைவாக பாதிப்பு கண்டறியப்பட்டு நிலையில் தற்போது நாள் ஒன்றுக்கு 100 க்கும் மேலாக தொற்று பாதிப்பு கண்டறியப்படுகிறது. சென்னை மற்றும் திருவள்ளூர் பகுதிகளில் கல்வி நிறுவனங்களில் கொரோனா  தொற்று பரவும் வண்ணம் உள்ளதால் அவற்றை கண்காணிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது. 

அடுத்த அலை வருவதற்கு வாய்ப்பு உள்ளதா இல்லையா என்று மருத்துவ வல்லுனர்கள் கூறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதனால் நாம் முன்னெச்சரிக்கையாக பொது இடங்களில் முக கவசம் அணிந்து கொள்வது நல்லது.’ என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க | மருத்துவமனைகளை தயார் நிலையில் வையுங்கள் - மருத்துவ கல்வி இயக்குனர் உத்தரவு

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News