தற்போதைய நிலவரப்படி திமுக 64; அதிமுக 66 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.
புதுவை யிலும் என்.ஆர்.காங்கிரஸ் 13 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
தழகத்தில் இரண்டு தொகுதிகளை தவிர 232 தொகுதிகளில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பாகவே பொதுமக்கள் வாக்குச்சாவடியில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். சில வாக்குச்சாவடியில் மின்னணு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. ஆனாலும் அவைகள் சரிசெய்யப்பட்டன. மேலும் தமிழகத்தில் சில மாவட்டங்களில் காற்றழுத்த தாழ்வு காரணமாக மழை பெய்தது. இதனால் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது. இவை அனைத்தயும் மீறி வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது.
தமிழகத்தில் சராசரியாக பதிவான வாக்குப்பதிவு 73.76 சதவீதம் ஆகும். மேலும் நமது சிங்கரா சென்னையில் குறைந்தபட்சமாக 55.27 சதவீத வாக்குகள் பதிவாகின.