அதிமுக நிர்வாகிகள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் தலைமையில் நடைபெற்றது. அப்பொழுது 4 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சசிகலா, டிடிவி தினகரன் செய்யப்பட்ட நிர்வாகிகள் நியமனம் செல்லாது. அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழுவை விரைவில் கூட்ட முடிவு. சசிகலா, தினகரனை கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்க முடிவெடுத்து தீர்மானம். நமது எம்.ஜி.ஆர்., ஜெயா டி.வி.யை அதிமுக.,வே எடுத்து நடத்த வேண்டும் போன்ற தீர்மானங்கள் போடப்பட்டன.
இதைக்குறித்து நாஞ்சில் சம்பத் கூறுகையில்,
எடப்பாடி பழனிசாமி அரசு மீது 21 எம்.எல்.ஏ.,க்கள் நம்பிக்கை இல்லை என்று கூறியதால் இபிஎஸ் அரசு பெரும்பான்மையை இழந்து விட்டது. இதனால் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பதவி விலகி இருக்க வேண்டும். ஆனால் இவர்கள் தற்போது தீர்மானங்கள் நிறைவேற்றி வருகின்றனர். இவர்களால் பொதுக்குழுவை கூட கூட்ட முடியாது. முறைப்படி தான் பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டார். எப்படி அவரது நியமனம் செல்லாது என்று கூறலாம். நமது எம்.ஜி.ஆர்., ஜெயா டிவி தனியார் சொத்துகாலை கையகப்படுத்துவேன் எனக் கூறுவது வெட்கக் கேடு. இன்று இவர்கள் போட்ட தீர்மானங்களை நான் ஒரு தீர்மானமாகவே கருதவில்லை எனவும் கூறினார்.