அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக கோடநாடு வழக்கு திரும்ப விசாரிக்கப்படுகிறது - அண்ணாமலை

சயனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் அளித்த வாக்குமூலம் உதகையிலுள்ள மாவட்ட நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 27 ஆம் தேதி ஒப்படைக்கப்படவுள்ளது

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 20, 2021, 10:02 AM IST
  • நீதிமன்றத்தில் அனுமதி பெற்றுத்தான் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது
  • அரசியல் தலையீடோ அல்லது பழிவாங்குகின்ற எண்ணமோ நிச்சயமாக இல்லை
  • பொய் வழக்கினை திமுக தொடுக்க முயல்வதாகக் குற்றம் சாட்டி பேரவையிலிருந்து அதிமுக வெளிநடப்பு
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக கோடநாடு வழக்கு திரும்ப விசாரிக்கப்படுகிறது -  அண்ணாமலை title=

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டவா்களில் முதன்மையானவரான சயனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் அளித்த வாக்குமூலம் உதகையிலுள்ள மாவட்ட நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 27 ஆம் தேதி ஒப்படைக்கப்படவுள்ளது. இதையடுத்து தான் இந்த வழக்கு சூடுபிடிக்கும் என்று எதிபார்க்கப்படுவதால் அதிமுகவினர் அச்சத்தில் உள்ளனர்.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின்னர், அதாவது 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி அதிகாலையில் கொடநாடு எஸ்டேட்டில் புகுந்த கொள்ளையா்கள் அங்கிருந்த முக்கிய ஆவணங்களையும், பொருள்களையும் கொள்ளை அடித்து தப்பிச் சென்றனா். இந்த சம்பவத்தின்போது அங்கு பணியிலிருந்த ஓம்பகதூா் என்ற காவலாளி கொல்லப்பட்டாா்.

இந்நிலையில், கொடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடா்பான வழக்கு ஆகஸ்ட் 27 இல் மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளதாக கூறிய விசாரணை அதிகாரி வேல்முருகன், அப்போது தான் இந்த வழக்கு குறித்த அடுத்தக்கட்ட நடவடிக்கை தெரிய வரும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதன் அடிப்படையில் முறைப்படி நீதிமன்றத்தில் அனுமதி பெற்றுத்தான் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.  இந்த விவகாரத்தில் அரசியல் தலையீடோ அல்லது பழிவாங்குகின்ற எண்ணமோ நிச்சயமாக இல்லை. விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என தெரிவித்தார்.

அதிமுகவினர் மீது பொய் வழக்கினை திமுக தொடுக்க முயல்வதாகக் குற்றம் சாட்டி பேரவையிலிருந்து அதிமுக வெளிநடப்புச் செய்து தர்ணாவில் ஈடுபட்டனர். மேலும் தன்னை இந்த கொலை, கொள்ளை வழக்கில் இணைக்க சதி நடப்பதாக முன்னாள் தமிழக முதல்வரும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், முடித்துவைக்கப்பட்ட வழக்கில் முன்னாள் முதலமைச்சர் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.  அதிமுக உறுப்பினர்கள் மீது எந்த தவறும் கிடையாது, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக கோடநாடு வழக்கு திரும்ப விசாரிக்கப்படுகிறது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ALSO READ ஒருநாள் கைதியாக இருக்க ரூ.500!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News