’ரத்த சோறு’ சாப்பிட்ட பெண்கள்- குழந்தை வரம் வேண்டி நூதன வழிபாடு

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி அருகே முனி பிடிக்கும் திருவிழாவில் குழந்தை வரம் வேண்டி பெண்கள் ரத்த சோறு சாப்பிட்டு நூதன வழிபாடு நடத்தினர்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 26, 2023, 03:01 PM IST
  • தர்மபுரியில் நூதன வழிபாடு
  • ரத்த சோறு சாப்பிடும் பெண்கள்
  • குழந்தை வரம் வேண்டி வழிபாடு
’ரத்த சோறு’ சாப்பிட்ட பெண்கள்- குழந்தை வரம் வேண்டி நூதன வழிபாடு title=

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள இருளப்பட்டியில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ காணியம்மன் கோயில் உள்ளது. இக்கோவில் தேர் திருவிழா கடந்த சில நாட்களுக்கு முன் கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் பல்வேறு விழாக்கள் மற்றும் சாமிக்கான வழிபாடுகள் நடத்தப்பட்டு வந்தன. கோயில் திருவிழாவுக்கு பூச்சாட்டியது முதலே காணியம்மன் கோயிலுக்கு பக்தர்களின் வருகையும் அதிகரித்தது. இதனை தொடர்ந்து தேரோட்டம் வெகு விமர்சியாக நடந்தது. 

மேலும் படிக்க | உண்டியலில் ரூ.100 கோடி செக்! சாமிக்கே அல்வா கொடுத்த பக்தர்-அதிர்ந்து போன அர்ச்சகர்கள்!

இதில் தருமபுரி, சேலம். திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.  இதன்பின் திருவிழாவின் இறுதி நாள் விழாவில் பாப்பிரெட்டிப்பட்டி, இருளப்பட்டி, புதுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சுற்றியுள்ள கிராம மக்கள் ஒன்று இணைந்து அருகே உள்ள வனப்பகுதிக்கு மேளம் தாளத்துடன் காணியம்மன் தூக்கிகொண்டு சென்றார்.  அங்கு இருக்கும் தலைவெட்டி பெருமாள் கோயில் அருகே உள்ள ஆற்றங்கரையில் அம்மனுக்கு பச்சைபோட்ட பின்னர் தலைவெட்டி பெருமாளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து விவசாயம் செழிக்க அம்மனை அங்கிருந்த வயல்வெளியில் வைத்து படையிலிட்டனர். இதன்பின் சக்தி அழைப்பு நடந்தது. 

அப்போது அருள் வந்து ஆடிய கோயில் பூசாரி ஆட்டின் தலையை வெட்டி ரத்த உறிஞ்சி குடித்தார். பின்ன அந்த ரத்தத்தை அம்மனுக்கு வைத்த படையலில் கலந்தார். அந்த ரத்த கலந்த சோற்றை குழந்தை பாக்கியம் இல்லாத குழந்தைகள், தீராத நோய், முனிபிடித்தவர்கள் இதனை வாங்கி சாப்பிட்டனர். ரத்த சோறு சாப்பிட்டால் உடனே வேண்டுதல் நிறைவேறும் என பக்கதர்களால் நம்பப்படுகிறது, இதனால் ரத்த சோற்றை வாங்க ஏராளமான பெண்கள் ஆர்வத்துடன் வாங்கி சாப்பிட்டனர். அப்போது அங்கு பேய் பிடித்து ஆடியவர்களுக்கு கோயில் பூசாரி, அம்மன் பாட்டுபாடி பேய் ஓட்டும் நிகழ்வும் நடந்தது.

மேலும் படிக்க | அதிமுக பொதுக்குழு விவகாரம்: ஓபிஎஸ் வழக்குகள் தள்ளுபடி... உடனே பிரஸ்மீட்டில் பேசிய இபிஎஸ்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News