தேர்தல் நாளை நடைப்பெற்றாலும் அதிமுக வெற்றிப்பெறும் -ஜெயக்குமார்!

எதிர்வரும் தேர்தல் நாளை நடைப்பெற்றாலும் அதிமுக வெற்றிப்பெறும் என மீன்வளதுறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்!

Last Updated : Dec 23, 2018, 01:39 PM IST
தேர்தல் நாளை நடைப்பெற்றாலும் அதிமுக வெற்றிப்பெறும் -ஜெயக்குமார்! title=

எதிர்வரும் தேர்தல் நாளை நடைப்பெற்றாலும் அதிமுக வெற்றிப்பெறும் என மீன்வளதுறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்!

தமிழக மீன்வள துறை அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் இன்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கையில்... ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் வருகையால் திமுக வாக்கு வங்கியே பாதிக்கப்படும் தவரி அதிமுக-விற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.
 
ரஜினி, கமலால் அதிமுக-வின் வாக்குகளை கலைக்க இயலாது. அவர்கள் திமுக-வின் வாக்குகளைதான் அவர் பிரிப்பார்கள் என தெரிவித்தார். மேலும் ரஜினிகாந்த் தொலைக்காட்சி தொடங்கினால் அதுவும் திமுக-வையே பாதிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர்., கஜா புயல் பாதிப்பை பார்வையிடாத வராத பிரதமர், பிரசாரத்திற்கு வருகிறார் என்றால் பாஜக தான் பதில் கூற வேண்டும். 

கஜா புயலால் 2 லட்சம் மின்கம்பங்கள் விழுந்திருக்கின்றது. உலகத்திலேயே எங்கேயும் இதுபோல் சேதம் நிகழ்ந்திருக்காது. அதிமுக அரசு புயல் பாதிப்புகளை திறம்பட செயல்பட்டு சரிசெய்துள்ளது.

ஒருவேலை நாளைக்கே தேர்தல் வந்தாலும் அதை சந்திக்க அதிமுக தயாராக உள்ளது. நடைப்பெறும் தேர்தலில் அதிமுக அமோக வெற்றிப் பெறும். என தெரிவித்தார்.

நாட்டில் உள்ள தனி நபர் கணினிகளை கண்கானிக்கும் உரிமையினை 10 அமைப்புகளுக்கு மத்திய அமைச்சகம் வழங்கியிருப்பது குறித்து கேட்டதற்கு., கணினி தகவல்கள் கண்காணிப்பு என்பது மருத்துவர் கையில் உள்ள கத்தி போன்று இருக்க வேண்டும். கொலைகாரன் கையில் இருக்கும் கத்திபோல் மாறிவிடக்கூடாது என தெரிவித்தார்.

Trending News