ADMK செயற்குழு கூட்டம் ஆக.,23 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

சென்னையில் ஆகஸ்ட் 20 ஆம் தேதி நடக்கவிருந்த அதிமுக செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 23 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு முதல்வர் மற்றும் துணைமுதலவர் அறிவிப்பு!!

Last Updated : Aug 18, 2018, 07:52 AM IST
ADMK செயற்குழு கூட்டம் ஆக.,23 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!  title=

சென்னையில் ஆகஸ்ட் 20 ஆம் தேதி நடக்கவிருந்த அதிமுக செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 23 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு முதல்வர் மற்றும் துணைமுதலவர் அறிவிப்பு!!

அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகள் அனைத்தும் ஆண்டுக்கு ஒருமுறை பொதுக்குழுவும், 2 முறை செயற்குழுவையும் கூட்ட வேண்டும் என்கிற மரபு உண்டு. அந்த வகையில், அரசியல் கட்சிகள் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டங்களை கூட்டி வருகின்றன.

இந்நிலையில், அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் வரும் 20 ஆம் தேதி (திங்கட்கிழமை) சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற இருப்பதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலவர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்திருந்தனர்.

ஆனால், தற்போது சென்னையில் ஆகஸ்ட் 20 ஆம் தேதி நடக்கவிருந்த அதிமுக செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 23 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலவர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளனர். 

 

Trending News