புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜெய்குமார் நலமுடனும், தெம்பாக இருப்பதாகவும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மேலும் கள்ள ஓட்டு போட்ட திமுகவினரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தவரை சிறையில் அடுததுள்ள திமுக அரசு, எதிர்கட்சியை அழித்து விட கங்கணம் கட்டி கொண்டுள்ளதாக திமுக அரசை விமர்சித்தார்.
சென்னை புழல் மத்திய சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் ஜெய்குமாரை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் சந்தித்து பேசினார். அவருடன் கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம் ஆகியோரும் உடன் இருந்தனர்.
சுமார் அரை மணி நேரம் சந்தித்து பேசிய பின், சிறை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர் செல்வம், நகர்புற உள்ளாட்சி தேர்தலில் கள்ள ஓட்டு போட திமுகவினர் முயன்ற போது முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், அவர்களை பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தார். இதற்காக திமுகவினரை கையும் களவுமாக பிடித்ததால் உண்மைக்கு மாறாக அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது திமுக அரசு என தெரிவித்தார்.
மேலும் படிக்க: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமின் மனு தள்ளுபடி.. மேலும் ஒரு வழக்கு பதிவு
தமிழகத்தில் பல்வேறு வகையில் ஆளும் அரசு துஷ்பிரயோகம் செய்து வருகிறது எனவும், இதற்காக தமிழகம் முழுவதும் ஆர்பாட்டம் நடைபெறுகிறது எனவும் தெரிவித்த அவர், தேனி மாவட்டத்தில் 11 வார்டுகளில் அதிமுக வெற்றி பெற்ற நிலையில், அவர்களை காவல் துறையினர் திமுகவில் சேர வற்புறுத்துவதாகவும் தெரிவித்தார்.
அதிமுகவின் 50 ஆண்டு காலத்தில் பல போராட்டங்களையும், அச்சுறுத்தல்களையும் சந்தித்து அதில் வெற்றி பெற்றுள்ளதாகவும், எந்த வித அச்சுறுத்தல் வந்தாலும் அதனை எதிர்கொள்வோம் எனவும், கள்ள ஓட்டு போட வந்தவர் மீது வழக்கு பதியாமல் அதிகாரத்தை கையில் வைத்து கொண்டு அரசு அச்சுறுத்தல் நடத்தி வருகிறது எனவும், அரசியல் ரீதியாக சந்திக்க திமுக அரசுக்க திராணி இல்லை என கடுமையாக விமர்சனம் செய்தார்.
மேலும் ஜெயகுமார் நலமாகவும், தெம்பாகவும் உள்ளார். எதிர்கட்சியை அழித்து விட திமுக அரசு கங்கணம் கட்டியுள்ளதாகவும் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR