ரஜினி ரசிகர்கள் அதிமுக-வுக்கு தான் வாக்களிக்க வேண்டுமா?

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ரஜினி ரசிகர்கள், அதிமுக-பாஜக கூட்டணிக்கு தான் வாக்களிக்க வேண்டும் என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்!

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Mukesh M | Last Updated : Feb 23, 2019, 05:39 PM IST
ரஜினி ரசிகர்கள் அதிமுக-வுக்கு தான் வாக்களிக்க வேண்டுமா? title=

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ரஜினி ரசிகர்கள், அதிமுக-பாஜக கூட்டணிக்கு தான் வாக்களிக்க வேண்டும் என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்!

நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், தமிழகத்தில் கூட்டணி உடன்பாடு குறித்த அறிவிப்புகள் தினம்தோறும் வெளியாகி வருகிறது. குறிப்பாக பிரதான கட்சிகளின் கூட்டணி உடம்படிக்கை பாதியளவு முடிவடைந்து விட்டது, எனினும் சில சிறு கட்சிகள் தங்களது நிலைபாடு குறித்து குழப்பமான நிலையில் இருந்து வருகிறது.

இதற்கிடையில் எதிர்வரும் தேர்தலில் யாருக்கு ஆதரவு என்கிற கேள்விக்கு, தமிழகத்தின் முக்கிய பிரச்சனை தண்ணீர் தட்டுப்பாடு. அதற்கு தீர்வு கொடுக்கும் கட்சியை மக்கள் ஆய்வு செய்து வாக்களிக்க வேண்டும் என்று ரஜினி சமீபத்தில் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் சென்னை பல்கலைக்கழகத்தில் நடைப்பெற்ற புகைப்பட கண்காட்சியில் பங்கேற்ற அமைச்சர் பாண்டியராஜன் இதுகுறித்து செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்...

“ரஜினி தண்ணீர் கொடுக்கும் கட்சிக்கு வாக்களியுங்கள் என்று கூறியுள்ளார். தண்ணீர் கொடுக்கக்கூடிய நிலையில் உள்ள ஒரே கட்சி தற்போது தமிழகத்தில் அதிமுக தான். அதற்கு என்ன முயற்சிகள் எடுத்துள்ளோம் என்பது குறித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெளிவாக சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

அவசரகால நடவடிக்கையாக நாங்கள் செய்கிற விஷயமாக இருக்கட்டும், நீண்டகால திட்டங்களுக்காக நாங்கள் செய்கிற விஷயங்கள், உதாரணத்திற்கு கடல்நீரை குடிநீராக்கும் திட்டமாகட்டும் ரொம்ப தெளிவாக நாங்கள் பதிலளித்துள்ளோம்.

ஆகவே ரஜினிகாந்த் அளித்த அறிக்கையின்படி ரஜினியின் ரசிகர்கள் கண்டிப்பாக அதிமுக கூட்டணிக்குத்தான் வாக்களிப்பார்கள்.” என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

Trending News