எடப்பாடி தலைமையிலான குழு ஒரு டம்மி; அவர்கள் வெற்றி பெற முடியாது - ஓபிஎஸ்!

இந்தியாவை மிக வலிமையோடு பிரதமர் மோடி வழி நடத்தி வருகிறார். இந்தியாவை வலிமையாக உருவாக்க அத்தனை நிலைகளிலிருந்தும் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார் என்று ஓபிஎஸ் கூறி உள்ளார்.  

Written by - RK Spark | Last Updated : Jan 29, 2024, 07:35 AM IST
  • எடப்பாடி தலைமையில் எந்த ஒரு கூட்டணியும் அமையாது.
  • எந்தக் கட்சியும் கூட்டணிக்கு போகத் தயாராக இல்லை.
  • ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாது - ஓபிஎஸ்
எடப்பாடி தலைமையிலான குழு ஒரு டம்மி; அவர்கள் வெற்றி பெற முடியாது - ஓபிஎஸ்! title=

பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் எடப்பாடி தலைமையில் எந்த ஒரு கூட்டணியும் அமையாது, எந்தக் கட்சியும் கூட்டணிக்கு போகத் தயாராக இல்லை, ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாது என்று முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் திண்டுக்கல்லில் பேசி உள்ளார். அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தொண்டர்கள் உரிமை மீட்பு  கூட்டம் நேற்று 28.01.25 திண்டுக்கல்லில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு வருகை தந்த தமிழக முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசுகையில், நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி அணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது. தேர்தல் தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைக்கப்பட்ட குழு எந்த குழுவாக இருந்தாலும் அந்த குழு டம்மி குழு அவர்கள் எந்த நேரத்திலும் வெற்றி பெற முடியாது. 

மேலும் படிக்க | நாடாளுமன்ற தேர்தலில் இம்முறை யாரோடு கூட்டணி? சூசகமாக சொன்ன கொங்கு ஈஸ்வரன்

இந்தியா கூட்டணி ஆண்டிகளின் மடம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கூட்டணியில் இருந்து ஒவ்வொருவராக வெளியேறி வருகின்றனர். கடந்த பத்தாண்டு காலம் இந்தியாவை மிக வலிமையோடு பிரதமர் மோடி வழி நடத்தி வருகிறார். இந்தியாவை வலிமையாக உருவாக்க அத்தனை நிலைகளிலிருந்தும் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார். நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தல் இந்திய நாட்டை யார் ஆள வேண்டும் முடிவை எடுக்க வேண்டிய சூழ்நிலை. இந்த தேர்தலில் பத்தாண்டு காலமாக சிறப்பாக ஆட்சி செய்த பிரதமராக வரவேண்டும் என்ற நல்ல கருத்து இந்தியா முழுவதும் வலு பெற்று இருக்கிறது, ஆகவே பாஜக தலைமையிலான கூட்டணி தான் வெற்றி பெறும். 

இந்தியா கூட்டணி இந்தியாவை ஆள முடியாது ஒருங்கிணைக்க கூடிய சக்தி அவர்களிடம் இல்லை. அது நிரூபிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரைபாஜக கூட்டணியில் வேறு எந்த கட்சிகள் சேர உள்ளது என்ற குறித்த கேள்விக்கு, எங்களுடன் யார் கூட்டணி என்பதை பொறுத்திருந்து பாருங்கள். எங்கள் கூட்டணியின் தலைமை பாஜக தான் அந்தக் கூட்டணியில் நாங்கள் இருக்கின்றோம். இன்னும் நிறைய கட்சிகள் அந்த கூட்டணியில் இணைய தயாராக உள்ளது. திண்டுக்கல்க்கு வருகை தந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் நாங்கள் யாருடனும் கூட்டணி இல்லை எனக் கூறியது தொடர்பாக குறித்த கேள்விக்கு, தமிழ் மாநில காங்கிரஸ் ஏற்கனவே பாஜக கூட்டணியில் நீடிக்கிறது. தற்பொழுதும் வரை  தொடர்ந்து நீடித்து வருகிறது. இதில் எந்த மாற்றமும் இல்லை

நீதிமன்ற உத்தரவை மீறி அதிமுக கொடி வேஷ்டி ஆகியவற்றை பயன்படுத்துவது குறித்த கேள்விக்கு, ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் எனக்குத் தான் தடை, விதித்துள்ளனர். 1.5 கோடி தொண்டர்களுக்கு தடை இல்லை எங்கள் உடம்பில் ஓடும் அண்ணா திமுக இரத்தத்தை மாற்ற முடியாது. சசிகலாவை தேர்தல் கூட்டணி குறித்து எப்போது சந்திப்பீர்கள் ன்ற கேள்விக்கு, சந்தர்ப்பங்கள் கூடி வரும் போது உறுதியாக சந்திப்போம். கே.பி.முனுசாமி குறித்த கேள்விக்கு, அவருடைய கடந்த கால அரசியலை பார்த்து வந்தீர்கள் என்றால் அவர் குறித்த எந்த கேள்வியும் கேட்க மாட்டீர்கள். தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கூட்டணி அமையாது எந்த கட்சியும் அவருடன் போக தயாராக இல்லை நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு இடத்தில் கூட எடப்பாடி பழனிச்சாமி அணி வெற்றி பெறாது. 

அதிமுகவில் இருந்து விலகிச் சென்ற யார் வந்தாலும் கட்சியில் இணைத்துக் கொள்வோம் என திண்டுக்கல் சீனிவாசன் கூறியது குறித்து கேட்ட கேள்விக்கு, அவர் இதற்காக  எந்த முயற்சியை எடுத்துள்ளாரா என்னிடம் (ஓபிஎஸ்) பேசினாரா சசிகலாவிடம் பேசினாரா. தமிழகத்தில் பிஜேபி கூட்டணியில் சேரும் கட்சியில் குறித்த கேள்விக்கு, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் கூட்டணி  குறித்து அறிவிக்கப்படும் என்று கூறினார்.

மேலும் படிக்க | கொள்ளையடித்ததை முதலீடு செய்யவே ஸ்டாலின் வெளிநாடு பயணம் - எடப்பாடி பழனிசாமி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News