வரும் ஜூன் 12 ஆம் தேதி ADMK மாவட்ட செயலாளர்கள் கூட்டம்..!

வரும் 12 ஆம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள், தலைமைக் கழக செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நடைபெறுவதாக தகவல்!!

Last Updated : Jun 9, 2019, 12:08 PM IST
வரும் ஜூன் 12 ஆம் தேதி ADMK மாவட்ட செயலாளர்கள் கூட்டம்..!  title=

வரும் 12 ஆம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள், தலைமைக் கழக செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நடைபெறுவதாக தகவல்!!

சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக மாவட்டச்செயலாளர்கள், தலைமைக் கழக உறுப்பினர்கள் கூட்டம் வரும் 12ஆம் தேதி  நடைபெறுகிறது. 

அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும் என எம்.எல்.ஏக்கள் குரல் எழுப்பி வரும் நிலையில், வரும் 12 ஆம் தேதி  மாவட்டச் செயலாளர்கள், தலைமை கழக உறுப்பினர்கள் கூட்டத்தில் அதிமுக கட்சி தலைமை அழைப்பு விடுத்துள்ளது. இந்த கூட்டத்தில் தேர்தல் முடிவுகளில் கிடைத்த வெற்றி, தோல்விகள் குறித்தும், கட்சி தலைமை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளதாக தெரிகிறது. 

பொதுக்குழு கூட்டம் கூட்டுவது தொடர்பாகவும் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளோருக்கு தனித்தனியாக அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது.

 

Trending News