கஜா புயலால் ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் டிச., 13,14,15-ல் நடைபெறும்!

கஜா புயலால் நவ.15,16,17ஆம் தேதிகளில் ஒத்திவைக்கப்பட்ட புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக தேர்வுகள் டிச.13,14,15 ஆம் தேதிகளில் நடைபெறும்! 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 4, 2018, 08:23 AM IST
கஜா புயலால் ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் டிச., 13,14,15-ல் நடைபெறும்! title=

கஜா புயலால் நவ.15,16,17ஆம் தேதிகளில் ஒத்திவைக்கப்பட்ட புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக தேர்வுகள் டிச.13,14,15 ஆம் தேதிகளில் நடைபெறும்! 

கடந்த நவம்பர் 15 ஆம் தேதி தமிழகத்தை தாக்கிய கஜா புயல் தமிழகத்தின் திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை மிக மோசமாக சிதைத்துள்ளது. கஜா புயலில் சிக்கி 45 பேர் பலியாகியுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த கோர தாண்டவத்தில் சுமார் 1,70,000 மரங்கள், 1,17,000-க்கும் அதிகமான வீடுகள் சேதமாகியுள்ளதுவும் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது. 

உடனடி நிவாரண பணிகளுக்காக தமிழக அரசு ரூ.1000 கோடி ஒதுக்கியுள்ளது. புயல் கரையை கடந்த பின்னர் நிவாரணப் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகின்றன.  எனினும் சில பகுதிகளில் போதுமான வசதிகள் இன்னும் வந்த சேரவில்லை என மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.  

இந்நிலையில், முதற்கட்டமாக நாகையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் நிவாரண உதவிகளை வழங்கினார். இதனை தொடர்ந்து, கஜா புயலால் பாதிக்கப்பட்ட வேட்டைக்காரன் இருப்பு கிராமத்திற்கு சென்ற முதலமைச்சர், அங்கு நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். கஜா புயலின் பொது பல்வேறு மாவட்டங்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது. மேலும், கல்லூரிகளில் நடைபெற்ற தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கபட்டத்து. 

இந்நிலையில், புதுவையில் கஜா புயலால் நவம்பர் 15,16,17 ஆம் தேதிகளில் ஒத்திவைக்கப்பட்ட புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக தேர்வுகள் டிசம்பர் 13,14,15 ஆம் தேதிகளில் நடைபெறும் என மத்திய பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 

 

Trending News