மருத்துவமனையில் இருந்து விஜயகாந்த் டிஸ்சார்ஜ்? தற்போதைய நிலை என்ன?

Vijayakanth Discharged from Hospital: நடிகரும் அரசியல் கட்சி தலைவருமான விஜயகாந்த் மருத்துவமனையில் இருந்து நாளை டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Written by - Yuvashree | Last Updated : Dec 7, 2023, 09:07 PM IST
  • விஜயகாந்த் கடந்த மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
மருத்துவமனையில் இருந்து விஜயகாந்த் டிஸ்சார்ஜ்? தற்போதைய நிலை என்ன? title=

நடிகரும் அரசியல் கட்சி தலைவருமான விஜயகாந்த் மருத்துவமனையில் இருந்து நாளை டிஸ்ஜார்ஜ் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த்..

நடிகரும் தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த், நவம்பர் 18ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தற்போது அவருக்கு உடல் நலம் தேறியுள்ள நிலையில் மருத்துவமனையில் நாளை அல்லது டிசம்பர் 11ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

மேலும் படிக்க | மழை வெள்ளத்தில் கலந்த கெமிக்கல்... உதவிக்கு சென்றவர்களுக்கும் பாதிப்பு

விஜயகாந்தின் உடல் நிலை குறித்த வதந்தி..

நடிகர் விஜயகாந்த், கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து, சில நாட்களுக்கு முன்னர் அவரது உடல் நிலையில் மிகுந்த பின்னடைவு ஏற்பட்டது. இதனால், ஒரு தனியார் மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டார். கடந்த சில நாட்களாக விஜயகாந்தின் உடல்நிலை குறித்த தகவல்கள் பல இணையத்தில் வலம் வந்து கொண்டிருந்தன. சில செய்தி தளங்கள், விஜயகாந்திற்கு செயற்கை சுவாசம் பொறுத்தப்பட்டுள்ளதாகவும், அவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் செய்திகளை வெளியிட்டு வந்தன. இந்த நிலையில் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் தனது கணவரின் உடல் நிலை குறித்து ஒரு வீடியோ பதிவினை சில நாட்களுக்கு முன்னர் வெளியிட்டார். 

அந்த வீடியோவில், விஜயகாந்தின் மனைவி பிரேமலதா கேப்டன் நலமுடன் இருப்பதாகவும் இன்னும் சில நாட்களில் கண்டிப்பாக வீடு திரும்பி அனைவரையும் சந்திப்பார் எனவும் கூறினார். இதனுடன், அவர் தனது மனைவி மற்றும் மகனுடன் இருக்கும் புகைப்படமும் இடம் பெற்றிருந்தது. இதைப்பார்த்த ரசிகர்கள், விஜயகாந்தின் உடல் நிலை தேரி வருவதை உறுதி செய்து கொண்டனர். சொன்னது போலவே நடிகர் விஜயகாந்த் உடல் நலனில் முன்னேற்றம் ஏற்பட்டு வீடு திரும்ப உள்ளார். இதனை விஜயகாந்தின் ரசிகர்களும் தேமுதிக கட்சியின் தொண்டர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர். 

மேலும் படிக்க | 2015 சென்னை வெள்ளம் செம்பரம்பாக்கம் ஏரி திறப்பால் ஏற்பட்டதா? எஸ்.பி.வேலுமணி விளக்கம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News