Rajinikanth: ரஜினி உடல்நிலை எப்படி உள்ளது? டிஸ்சார்ஜ் எப்போது? - அப்பல்லோ பரபர அறிக்கை

Rajinikanth Health Update: ரஜினிகாந்திற்கு அளிக்கப்பட்டுள்ள சிகிச்சை குறித்தும், அவர் எப்போது வீடு திரும்புவார் என்பது குறித்தும் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Oct 1, 2024, 05:30 PM IST
  • ரஜினிக்கு இதயத்திலிருந்து வெளியேறும் பிரதான இரத்த நாளத்தில் வீக்கம் ஏற்பட்டது.
  • ரஜினிக்கு டிரான்ஸ்கேதீட்டர் முறை மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது.
  • ரஜினிகாந்த் நிலையாக இருக்கிறார் என மருத்துவமனை தகவல்
Rajinikanth: ரஜினி உடல்நிலை எப்படி உள்ளது? டிஸ்சார்ஜ் எப்போது? - அப்பல்லோ பரபர அறிக்கை title=

Actor Rajinikanth Health Update: அப்பல்லோ மருத்துவமனை இன்று வெளியிட்ட அறிக்கையில்,"ரஜினிகாந்த் செப். 30ஆம் தேதி அன்று கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது இதயத்திலிருந்து (Aorta) வெளியேறும் பிரதான இரத்த நாளத்தில் அவருக்கு வீக்கம் ஏற்பட்டது. அதற்கு அறுவை சிகிச்சை அல்லாத டிரான்ஸ்கேதீட்டர் முறை மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. 

மூத்த இருதயநோய் நிபுணரான மருத்துவர் சாய் சதீஷ், பெருநாடியில் ஒரு ஸ்டென்டை வைத்து வீக்கத்தை (எண்டோவாஸ்குலர் ரிப்பேர்) முழுவதுமாக அடைத்தார், . திட்டமிட்டபடி இந்த நடைமுறை நடந்தது என்பதை அவரது நலம் விரும்பிகளுக்கும் ரசிகர்களுக்கும் தெரியப்படுத்த விரும்புகிறோம். ரஜினிகாந்த் நிலையாக இருக்கிறார், உடல்நிலையும் நன்றாக இருக்கிறது. இரண்டு நாட்களில் அவர் வீடு திரும்புவார்" என குறிப்பிடப்பட்டுள்ளது. 

முன்னதாக ரஜினியின் உடல்நிலை சீராக உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஊடகம் ஒன்றிடம் தெரிவித்திருந்தார். ரஜினிகாந்தின் உடல்நிலைக்கு அச்சப்படும் வகையில் எதுவும் இல்லை என்றும் பெரிய அளவிலான அறுவை சிகிச்சை எதுவும் செய்யப்படவில்லை எனவும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல் தெரிவித்திருந்தார். மேலும், ரஜினிகாந்த் தொடர் பரிசோதனைக்காக சென்றுள்ளார் எனவும், வெறும் வயிற்றில் பரிசோதனை செய்ய வேண்டும் என்பதால் நேற்று இரவு மருத்துவமனையில் அனுமதியானார் என்று கூறினார். 

அதுமட்டுமின்றி, அப்போல்லா மருத்துவமனை நிர்வாகத்தினர் உடன் தமிழ்நாடு சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்பில் இருப்பதாகவும், ரஜினிக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ முறைகளை அதிகாரிகள் தொடர்ந்து அறிந்து வருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். மூன்று முறை அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனையிடம் பேசி விசாரித்துள்ளோம் எனவும் கூறியிருந்தார். 

ரஜினிகாந்தின் 170ஆவது திரைப்படமான வேட்டையன் வரும் அக். 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. கடந்தாண்டு வெளியான ஜெயிலர் திரைப்படத்திற்கு பின் நீண்டநாள் கழித்து ரஜினியின் திரைப்படம் வெளியாவதால், திரையரங்குகளில் ரஜினியை கொண்டாட ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்த நிலையில், அவர் நேற்றிரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது ரஜினி ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலகிற்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை பல்வேறு சமூக வலைதளப்பதிவுகளின் மூலம் அறிந்துகொள்ள முடிந்தது. 

எனினும், அவர் தொடர்ந்து அப்பல்லோ மருத்துவமனையில் நலமுடன் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. அந்த வகையில், அதிகாரப்பூர்வமாக அப்பல்லோ மருத்துவமனை அவருக்கு ஏற்பட்ட உடல்நலப் பிரச்னை குறித்தும், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்தும், அவர் எப்போது குணமாகி வீடு திரும்புவார் என்பது குறித்து தகவல் தெரிவித்திருப்பது ரசிகர்களுக்கு பெரும் ஆறுதலாக அமைந்துள்ளது. மேலும், ரஜினி விரைந்து குணமாகி வீடு திரும்ப வேண்டும் என ரசிகர்கள் வேண்டி வருகின்றனர். ரஜினி சில நாள்களுக்கு முன் அவரின் கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னை திரும்பியிருந்தார். 

 
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News