அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் சுமார் ஏழு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது,
தமிழகத்தில் வட கிழக்குப் பருவமழை வரும் நவம்பர் 8 ஆம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வங்கக் கடலில் உருவான காற்றமுத்த தாழ்வு நிலை, டிட்லி புயலாக மாறி ஒடிசா நோக்கிச் சென்றதால், தமிழகத்தில் பருவமழை தொடங்கிவில்லை. இருப்பினும் தமிழகத்தில் அவ்வப்போது லேசான மழை பெய்யும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், அரபிக்கடல் மற்றும் வங்கக் கடலில் காற்றின் திசை மாறிய பிறகு, இன்று அளவில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதையடுத்து, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என கூறியுள்ள வானிலை மையம், இதர பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கரூர், திருச்சி, நாகப்பட்டினம், தஞ்சாவூர், அரியலூர், புதுக்கோட்டை மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் அடுத்த மூன்று மணிநேரத்தில் மிதமான மலையில் இருந்து கனமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவத்துள்ளது.
மேலும், கடந்த 24 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 34 மில்லி மீட்டரும், திருவண்ணாமலை, கோயம்புத்தூர் மாவட்டத்தில் 17 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது...!