சென்னை: தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 14-ஆம் தேதி தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகை விவசாயிகளையும், விவசாயத்திற்கு உதவக்கூடிய கருவிகளையும் கொண்டாடும் விதத்தில் இந்த பண்டிகையை வருடந்தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக அரசு மக்களுக்கு உதவும் வகையில் சில பொங்கல் பரிசு பொருட்களை கடந்த சில வருடங்களாக வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் 2022-ம் ஆண்டு தை பொங்கலை மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசுப் பொருட்களை வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவு ஆணையினை பிறப்பித்துள்ளார்.
ALSO READ மங்களம் பொங்கும் கார்த்திகை மாத பிறப்பு இன்று..!!!
அந்த அறிவிப்பின்படி 2022 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி வரும் தமிழர் திருநாள், தைப்பொங்கலுக்கு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் கீழ்காணும் 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கிட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு முக. ஸ்டாலின் அவர்கள் ஆணை பிறப்பித்துள்ளார். மக்களுக்கு வழங்கப்படும் அந்தத் தொகுப்பில் உங்களுக்கு தேவையான பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருட்கள் வழங்கப்படும்.மேலும் பண்டிகைக்கான சமையலுக்கு தேவையான மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய மளிகை பொருட்களும் அடங்கிய துணிப்பை (20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு) 2,15,48,060 குடும்பங்களுக்கு மொத்தம் ஆயிரத்து 88 ரூபாய் கோடி செலவில் வழங்கப்படும்" என்று அந்த அறிவிப்பின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் 15 பொருட்கள் வழங்கிய நிலையில் தற்போது 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த அறிவிப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கும், மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் உதவிகரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ALSO READ ரூ. 2,079 வெள்ள நிவாரணம்: மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் டி.ஆர் பாலு கோரிக்கை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR